நிஃப்டி எதிர்பார்ப்புகள்: 7980 என்ற லெவலின் மீது கவனம் வையுங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ன்னமும் இரண்டு வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோசிங்குகள் நடந்தால் மட்டுமே ஏற்றம் தொடரும் என்பதை உறுதி செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலையிலேயே டெக்னிக்கல் லெவல்கள் இருக்கின்றது.

என்பதை புரிந்துகொண்டே டிரேடிங் செய்யவேண்டியிருக்கும் என்றும் தற்போதைக்கு 7980 லெவல் ஒரு முக்கிய தடையாக இருக்கின்றது என்றும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையை ஏற்றத்தில் கொண்டு செல்கின்றது என்றும் சொல்லியிருந்தோம். நான்கு டிரேடிங் தினங்களை மட்டுமே கொண்டிருந்த வாரத்தில் ஒரு நாள் ஏற்றத்தையும் இரண்டு நாட்கள் சிறிய அளவிலான இறக்கத்தையும், ஒரு நாள் மாற்றம் ஏதும் இல்லாமலும் குளோசானது.  வியாழன்று 7978 லெவல்வரை சென்ற நிஃப்டி  அன்றைய குளோசிங்கில் 7912ல் குளோசானது.  வார இறுதியில் வாராந்திர ரீதியாக நாற்பத்தி எட்டு புள்ளிகள் ஏற்றத்தில் குளோசாகியிருந்தது. வரப்போகும் வாரம் பெரிய அளவிலான இந்திய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரம்.  அதே சமயம் ஏப்ரல் 27ம் தேதியன்று அமெரிக்க வட்டிவிகித முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இந்த வட்டிவிகித முடிவுகள் சந்தையின் அடுத்த கட்ட போக்கை நிர்ணயிப்பதாய் இருக்கும் எனலாம். செய்திகள், ரிசல்ட்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அதிகமான கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தினை தவிர்க்கவேண்டும்.  அதே போல் ஓவர்நைட் பொசிஷன்களையும் முழுமையாக தவிர்ப்பதே நல்லது. 7980 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டி இரண்டுக்கும் மேற்பட்ட குளோசிங் நடக்காத வரையில் மேல்நோக்கிய வேகமான மூவ்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே எனலாம். கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய  டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 22-04-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்