பிசினஸ் சீக்ரெட்ஸ் - 40

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏ.ஆர்.குமார் பிசினஸ்மேன்கள் தொழில் கடன் வாங்கும்போது உஷார்!

பிசினஸ் சீக்ரெட்ஸ் தொடர் மூலம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்த கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், இந்த வாரத்தில் வளர்ந்து வரும் சில தொழில்முனைவோர்களை சந்தித்து, தொழில்ரீதியாக அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் தையோ ஃபீட் மில் பிரைவேட் லிமிடெட் (Taiyo Feed Mill (P) Ltd) நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.பிராபகர், அஸ்ஸென்ஸ் (Ascens) நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் சி.ஓ.ஓ.வுமான ராம் ரவீந்திரன், ஆதிசக்தி புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சி.செந்தில் கண்ணன், எகேஎஸ் கேஷஸ் நிறுவனத்தின் ராம.கல்யாணசுந்தரம், ரேடியன்ஸ் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டி.எஸ்.நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பரஸ்பரம் அறிமுகம் முடிந்தபின்பு, தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை சி.கே.ரங்கநாதனிடம் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான பதிலைத் தந்தார் சி.கே.ஆர். முதலில் செந்தில் கண்ணன் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார்.

‘‘நான் மிக்ஸிங், பேக்கேஜிங் மற்றும் ஆட்டோமேஷன் தொடர்பான பல இயந்திரங்களைத் தயாரித்து வருகிறேன். குறிப்பிட்ட ஒரு பொருளை பெட்டிக்குள் அடைத்து, அந்தப் பெட்டியையும் மூடித் தந்துவிடுகிற மாதிரியான இயந்திரத்தை (Case paker) நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். ஆர் அண்ட் டி.காக நாங்கள் நிறைய செலவு செய்திருப்பதால்,  நாங்கள் தயாரிக்கும் வேறு இயந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய்க்கான ஆர்டர் கையில் தயாராக இருக்கிறது. ஆனால், இந்த ஆர்டரை நிறைவேற்றத் தேவையான மூலதனம் போதுமான அளவு இல்லை. நாங்கள் ஆர். அண்ட் டி.க்காக நிறைய செலவு செய்துவிட்டோம். இதனால் ஆப்ரேட்டிங் கேப்பிட்டல் போதுமான அளவு இல்லை.

வங்கியில் ஏற்கெனவே கடன் வாங்கிவிட்டோம். மேற்கொண்டு கடன் வாங்க வேண்டும் என்றால் கடனுக்கு நிகரான சொத்தினை அடமானமாகத் தரும்படி கேட்கிறார்கள். வங்கிகள் கேட்கும் அளவுக்கு சொத்துக்கள் என்னிடம் இல்லை. இந்த நிலையில் ஆர்டரை நிறைவேற்றத் தேவையான மூலதனத்தை நான் எப்படி பெறுவது?’’ என்று கேட்டார் செந்தில் கண்ணன். அவரது கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் சி.கே.ஆர்.

‘‘நீங்கள் சொல்வதில் இருந்து பார்த்தால், உங்கள் கம்பெனியின் பேலன்ஸ்ஷீட்டை இன்னும் பலமாக்க வேண்டும். ஆர் அண்ட் டி-க்காக நிறைய செலவழிப்பது தவறில்லை. ஆனால், ஆப்ரேட்டிங் கேப்பிட்டல் இல்லாமல் போகிற அளவுக்கு செலவு செய்ய வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள்.

என்றாலும் இப்போது ஒன்பது கோடி ரூபாய்க்கு கையில் ஆர்டர் இருப்பதாக சொல்கிறீர்கள். இந்த ஆர்டரை அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் முடித்துக் கொடுத்துவிட முடியும் என்றும் சொல்கிறீர்கள். இந்த குறுகிய காலத்துக்குத் தேவையான மூலதனத்தை தனிப்பட்ட நபர்களிடமிருந்து பெறுவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம். இது மாதிரி தனிப்பட்ட நபர்களிடம் இருந்து கடன் வாங்கும்போது அதிக வட்டி தரவேண்டியிருக்கும். நான் பிசினஸ் தொடங்கிய காலத்தில் திடீரென ஏற்படும் மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மார்வாடிகளிடம் கடன் வாங்கி இருக்கிறேன். அதுவும் 54 சதவிகித வட்டிக்கு. எனக்கு அப்போது கிடைத்த லாப வரம்பு மிக அதிகமாக இருந்ததால், அவர்கள் கேட்ட வட்டியை என்னால் தரமுடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்