ZERO TO HERO - 2.0 - 5

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுத்தேன்!

ஹாலிவுட் சினிமாப் படத்துக்கு நிகரான பல சாகசங்களைக் கொண்டிருக்கிறது பார்த்திபனின் வாழ்க்கை. கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி  மதிப்புக்கு மருந்து, மாத்திரைகளை  ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 ஜீரோவில் தொடங்கி ஹீரோவாக இருக்கும் அவர் வாழ்க்கைக் கதை அத்தனை சுவாரஸ்யம்! அவர் கதையை அவரே சொல்லத் தொடங்கினார்.

‘‘கும்மிடிப்பூண்டிக்குப் பக்கத்தில் உள்ள பூவலம்பேடு என்கிற சிறிய கிராமத்தில் 62 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தேன். என் குடும்பத்தினர் என்னைக் கஷ்டப்பட்டு கல்லூரி வரை படிக்க வைத்தனர். பொன்னேரி யில் உள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். படித்து முடித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தேன். கையில் 10 ரூபாயும் ஒரு படி அரிசியும் எனக்கு கொடுத்து அனுப்பினார்கள். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் அச்சு கோர்க்கும் வேலையை செய்து வந்தார். அவர் வீட்டில் தங்கி வேலை தேடினேன். பல வேலைகளை செய்துவிட்டு,  கடைசியில் ஒரு மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் வேலை கிடைத்தது. இந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கடுமையாக உழைத்தேன். 

கல்லூரியிலேயே நான் கம்யூனிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். எனவே, எனக்குள் பணத்துக்கும் பணம் படைத்தவர்களுக்கு எதிராகவும் பலமான பல அபிப்ராயங்கள் உருவாகி இருந்தது. ஆனால், 1981-ல் நான் படித்த Think and Grow Rich என்கிற புத்தகத்தை ஆழ்ந்து படித்தபின்பு , என் சிந்தனைகள் மாறத் தொடங்கின. என் மூத்த மகனுக்கு ஒரு வயதான போது, அவனுக்கு கடுமையான வயிற்றுப் போக்கில் அவதிப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்து என்   கிராமத்துக்கு ஓடினேன். உடனே அவனைத் தூக்கிக் கொண்டு சென்னையில் எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் கொண்டு சென்றேன். இன்னும் அரை மணி நேரத்தில் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை தராவிட்டால், அவனை உயிரோடு பார்க்க முடியாது என்றார் டாக்டர். என் கையில் சில பத்து ரூபாய்களே இருந்தன. எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ மனையில் சேர்த்தார் டாக்டர்.  அங்கே டயரியாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடுவில் என் குழந்தையை வைத்துக் காப்பாற்றுவதற்குள் நான் மொத்தமாக மாறியிருந்தேன்.

இனியும் பணம் இல்லாமல் இருந்தால் நான் பட்ட கஷ்டம் என குடும்பத்தினரும் பட வேண்டியிருக்கும் என்கிற எண்ணம் என் மனதில் ஆழமாகப் படிந்தது. நான் இத்தனை நாளும் ஏழைகளை நேசிப்பதைவிட ஏழ்மையைத்தான் நேசித்திருக் கிறேன் என்பதை புரிந்துகொண் டேன். இனி என்னைப் போன்ற ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனில், பணம் சேர்க்கத்தான் வேண்டும் என்று நினைத்து, புதிய வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன்.

என் நண்பர் ஒருவர் ரூ.5,000 முதலீட்டில் புரோட்டீன் டானிக் தயாரிக்கலாம் என்றார். அது மருந்தல்ல. அதை யார் வேண்டுமானாலும் தயாரித்து விற்கலாம். அதைத் தயாரித்து ஆந்திராவில் விற்கத் தொடங்கிய வுடன் கையில் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்தது. என்னாலும் நாலு காசு சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் பிறந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்