டிரேடர்களே உஷார் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கண்ணில் பார்த்த லாபம்!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

டிரேடிங்கில் பல வருடங்களாக இருந்த நடேசனுக்கு, உள்ளுக்குள் ஒரு கேள்வி வந்தது. நாம இந்த டிரேடிங் செய்றது தப்பா, ரைட்டா?  இந்தக் கேள்வி அவர் மூளையை அரித்துக்கொண்டே இருந்தது. பகல் பூராவும், நினைத்துப் பார்க்க பார்க்க ஒரே குழப்பமாக இருந்தது.

இரவு படுத்தார், ஆனால் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். கடைசியாக ஒரு யோசனை தோன்றியது. 

தன் நீண்டகால நண்பர் குமரேசனுக்கு போன் போட்டார். ‘‘சொல்லு நடேசா, என்ன இந்த நேரத்தில போனு?  ஏதாவது பிரச்னையா?’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல குமரேசா. மனசுல ஒரு குழப்பம், அதான் உனக்கு போன் பண்ணேன்.’’

‘‘சரி சொல்லு.’’

‘‘ஒண்ணும் இல்ல,  நானும் ரொம்ப நாளா, இந்த ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட் அப்படின்னு மாத்தி மாத்தி டிரேட் பண்ணிட்டிருக்கேன்.  இத்தன வருஷம் ஆச்சி, பெருசா ஒண்ணும் சம்பாதிக்கவுமில்ல, பெருசா இழக்கவும் இல்லை. நிறைய வருஷம் போயிடுச்சி.  இதை தொடர்ந்து பண்ணலாமா, வேணாமான்னு ஒரு கேள்வி உள்ளே ஓடிக்கிட்டே இருந்துச்சி. அதான் உனக்கு போன் பண்ணேன்.’’

‘‘என்ன நடேசா, எனக்கு இந்த மார்க்கெட் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாதே.  என்ன கேட்டா, எனக்கு என்ன பதில் தெரியும்.’’

‘‘இல்லடா,  எனக்கு மனசு விட்டு பேச யார் இருக்கா சொல்லு. நல்லதோ, கெட்டதோ அதை உங்கிட்டதான் நான் டிஸ்கஸ் பண்ணுவேன்.’’

‘‘சரி, நடேசா, நான் நாளைக்கு உன்னை நேரே வந்து வீட்ல பார்க்கிறேன்.  நிம்மதியா தூங்கு.  குட்நைட்.’’

காலையிலேயே குமேரசன்  நண்பன் நடேசன் வீட்டுக்கு போனார். ‘‘வா வா குமரேசா...   உள்ளே வா. உள்ளே ரூமுக்கு போயிடலாம் வா.  அங்கதான் கம்ப்யூட்டர், இன்டர்நெட் எல்லாம் இருக்கு.’’

ஏற்கெனவே நடேசன், சிஸ்டத்தை ஆன் செய்து,  டிரேடிங் செய்ய தயாராக வைத்திருந்தார்.

‘‘என்ன நடேசா, எனக்குதான் டிரேடிங் பத்தி ஒண்ணும் தெரியாதே, நான் என்னத்தைச் சொல்ல முடியும்?’’

‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.  நான் என்ன செய்யறன்னு பாரு.  அப்புறமா உனக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லு.’’

குமரேசனும், நடேசனுக்கு அருகாமையில் ஒரு சேரை போட்டு உட்கார்ந்துகொண்டார்.

நடேசன், கம்ப்யூட்டரை கொஞ்சம் மேலோட்டமாக துடைத்தார்.  கம்ப்யூட்டர் திரையில் எண்கள் மாறிக்கொண்டே இருந்தன. சிவப்பு, பச்சை வண்ணங்கள் தோன்றி தோன்றி மறைந்தன.

குமரேசனுக்கு ஸ்கிரீனை பார்த்து ஒன்றும் புரியவில்லை. சரி, நடேசன் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம் என்று பார்க்கத் தொடங்கினார்.

நடேசன் ஒரு நோட்டை எடுத்தார். அதில் சில கம்பெனிகளின் பெயர், அவற்றின் விலை விவரங்களைக்  குறித்து வைத்திருந்தார்.

அவர் எழுதி வைத்திருந்த நாலு கம்பெனி பெயர்களை கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கொண்டு வந்தார்.  அவற்றின் விலைகள் மாறிக்கொண்டே இருந்தது.  பச்சை சிவப்பு வண்ணங்களும் தோன்றி தோன்றி மறைந்தன.

அவர் வைத்திருந்த நாலு கம்பெனிகளில் முதலாவதாக மேலே இருந்தது, ஐடிசி நிறுவனம்.  தான் செய்வது குமரேசனுக்கும் புரியவேண்டும் என்று அவ்வப்போது அதை அவருக்கு புரியவைக்கவும் முயற்சித்தார். 

அவர் கணிப்புபடி, ஐடிசி பங்கின் விலை ரூ.320-யைத் தாண்டி ஏறினால் வலிமையாக ஏறும். தற்போது அது ரூ.318 என்ற விலையில் வியாபாரம் ஆகி வந்தது. நடேசன் விலை ரூ.320-யைத் தாண்ட காத்திருந்தார். விலையும் ரூ.318 – 319 என்று தொடர்ந்து அரை மணி நேரமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது.  திடீரென்று விலை ரூ.320-யை  உடைத்து 321, 321.50, 322 என்று எகிறியது. 

நடேசன், உடனே பாய்ந்து 500 ஐடிசி ஷேர் வாங்கினார்.  வாங்கிய விலை ரூ.322. பங்கை வாங்கியவுடன், நடேசன் உடலில் ஒரு படபடப்பு தொற்றிக் கொண்டது. இதுவரை சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த நடேசன், இப்போது சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார், கண்களை கூர்மையாக்கி விலையை உற்றுப் பார்த்தார்.

குமேரசனுக்கு இதை பார்க்கவே விந்தையாக இருந்தது.  இதுவரை சாதாரணமாக உட்கார்ந்து இருந்த இந்த நடேசன் திடீரென்று,  காட்டில் இரையை பார்த்த வேட்டை விலங்கு, அதை அடிக்க தயாராகும் அமைப்பில், ஏன் உடலை உயர்த்தி உட்கார்ந்து இருக்கிறாரே?  சரி பார்ப்போம் என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார் குமரேசன்.

நடேசன் கம்ப்யூட்டர் ஸ்கிரீனை தொடர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஐடிசி விலை ரூ.322-ல் இருந்து ரூ.323-யைத் தொட்டது.

நடேசன் மனம் கணக்கு போட்டது.  ஒரு ரூபா லாபம்.  ஐநூறு ஷேர். ரூ.500 லாபம். ஐடிசி விலை ரூ.324-க்கு நகர்ந்தது.

லாபம் ரூ.1,000 மனசு கணக்கு போட்டது. விலை ரூ.325... லாபம் ரூ.1,500... விலை ரூ.326... லாபம் ரூ.2,000.

நடேசனுக்கு மனதில் குப் என்று சந்தோஷம் பூத்தது. சுளையாக ரூ.2,000 லாபத்தில் இருக்கிறார்.  ஓரக்கண்ணால் குமரேசனைப் பார்த்தார்.  குமரேசன் ஒண்ணும் புரியாமல் தேமே என்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

நடேசன் மனதில் ஒரு கணக்கு ஓடியது. ஓகே. விலை ரூ. 328-யைத் தொட்டவுடன் ரூ.3,000 லாபம். அப்போது டக்கென்று விற்றுவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

ஐடிசி விலை ரூ.326 - ரூ. 326.50 என்று ஊசலாடிக்கொண்டு இருந்தது.  நடேசன் மனதுக்குள் ரூ.328 வரவேண்டும், ரூ.328 வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

பார்த்துக்கொண்டு இருக்கும்போதே விலை டக்கென்று ரூ.324-க்கு வந்து விழுந்தது. மனசு கணக்கு போட்டது. ரூ.2,000 லாபம் இப்ப ரூ.1,000 ஆக குறைந்து விட்டது. கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும்போது விலை ரூ.322-ஆகக் குறைந்தது.

நடேசன் மனது நோ...... என்று அலறியது.  அடடா, வந்த லாபத்தை விட்டுவிட்டோமே! 

இதுவரை அவர் மனதுக்குள் இருந்த அத்தனை சந்தோஷமும் காணாமல் போனது. ஒரு குழந்தை தனக்குப் பிடித்த இனிப்பை, கையில் இருந்து வாய்க்கு எடுத்து செல்லும்போது, யாரோ வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டது போன்று இருந்தது. மனதுக்குள் ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது.   மீண்டும் கண்கள் விலையை நோக்கி நகர்ந்தன. ஐடிசி ரூ.322- லிருந்து பத்து பைசா, பத்து பைசாவாக இறங்க ஆரம்பித்தது.  ரூ.321.90, ரூ. 321.80, ரூ.321.70

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்