ஃபண்ட் ஹவுஸ் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுகனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

னரா ராபிகோ (Canara Robeco) மியூச்சுவல் ஃபண்ட் நமது பொதுத்துறை வங்கியான கனரா வங்கியும், நெதர்லாந்தைச் சார்ந்த ராபிகோ நிறுவனமும் சேர்ந்து நடத்தி வரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும்.

இன்றைய நிலையில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து  வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் இரண்டாவதாக ஆரம்பிக்கப் பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும்.

கனரா வங்கி 1906-ல் ஆரம்பிக்கப்பட்டது. நாடெங்கிலும் 3000-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இவை தவிர, ஹாங்காங், சீனா மற்றும் யூ.கே-விலும் தனது கால்களைப் பதித்துள்ளது. இன்ஷூரன்ஸ், செக்யூரிட்டீஸ், ஹவுஸிங் ஃபைனான்ஸ், வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற வேறு பல தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது.

ராபிகோ 1929-ல் ரோட்டர்டேம், நெதர்லாந்தில் துவங்கப்பட்ட நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் 54 நாடுகளில் தனது கால்களை பதித்துள்ளது. 300 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

2013-ம் ஆண்டு ஜப்பானைச் சார்ந்த ஒரிக்ஸ் (ORIX) நிறுவனம் ராபிகோவை விலைக்கு வாங்கியது. நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை, உயர் தரமான சேவையுடன் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்