கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

சோ.கார்த்திகேயன்

சோயா பீன்ஸ், சென்னா போன்றவை இந்த வாரம், எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து அலைஸ் ப்ளூ கமாடிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் விளக்குகிறார்.        

சோயாபீன்ஸ்!

‘‘ஒரு கிலோ சோயா பீன்ஸ் மே மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் 4,175 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சோயா பீன்ஸ் தேவைக் குறைவின் காரணமாக இதன் விலை ரூ.3,910-க்கு சரிவடைந்தது.

தற்போதைய நிலையில், வரும் வாரங்களில் சோயா பீன்ஸ் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. சோயா பீன்ஸ் விலை ரூ.3,800-யை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னா!    

என்.சி.டி.இ.எக்ஸ். வர்த்தக மையம் சென்னா மீதான கொள்கைகளை தளர்த்தி உள்ளது. இதனால் ஒரு கிலோ சென்னா மே மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் விலை கடந்த வாரத்தில் அதிகளவில் ஏற்றத்தைச் சந்தித்தது.

வரும் வாரங்களிலும் இதைப் போல சென்னா விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏனெனில் டிரேடர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் சென்னாவை வாங்கி குவிப்பதால்,  மே மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் விலை 5,750 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய்க்கு வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னா சப்போர்ட் லெவல் 5,250 ரூபாயில் உள்ளது.’’

சீரகம்!   

சீரகம் பற்றாக்குறை தற்போது அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இதன் தேவை அதிகரித்து உள்ளது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் சீரகம் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்து காணப்படுகிறது.

சீரகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுவதால் சீரகம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும் சீரகத்தின் தேவையும் அதிகரித்து வருவதால் இதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சீரகம் ஏற்றுமதியில் சமீப காலமாக இதன் தேவை கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சந்தையில் நல்ல தரமான சீரகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுவதால் வரும் காலங்களில் மேலும் அதிகளவில் சீரகம் ஏற்றுமதி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வெப்பநிலை கடுமையாக வாட்டி வதைப்பதால் வரத்து சரிவடைந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இதன் விலை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரங்களில் சீரகம் மே மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சப்போர்ட் லெவல் ரூபாய் 17,100. டார்கெட் ரூபாய் 17,825.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்