மல்லையா விவகாரத்தில் காலம் கடந்த நடவடிக்கை!

ஹலோ வாசகர்களே..!

மீண்டும் விஜய் மல்லையா விவகாரம் புயலைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. லண்டனில் வசித்துவரும் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நமது வெளியுறவுத் துறை இங்கிலாந்து அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. இந்தியாவின் இந்த வேண்டுகோளை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, அவரைத் திரும்ப அனுப்புமா என்பது கேள்விக்குறியே!

இந்திய வெளியுறவுத் துறை இப்படிக் காலம் கடந்தபின் கடிதம் எழுதுவதினால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. காரணம், மல்லையா மீது கடந்த பல மாதங்களாகவே பல வழக்குகள் இருந்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பணத்தைத் தராமலே அவர் வெளிநாடுகளுக்கு போவதும் வருவதுமாகத்தான் இருந்தார். அவர் எந்த நேரத்திலும் வெளிநாட்டுக்குத் தப்பித்து ஓடலாம் என்பதை வங்கிகளோ அல்லது புலனாய்வு அமைப்புகளோ அல்லது அமைச்சர்களோ முன்கூட்டியே உணராமல் இருந்துவிட்டு, இப்போது எப்படியாவது அவரை திரும்ப அழைத்து வந்து பணத்தை வாங்காமல் விட மாட்டோம் என்பது சரியா?   

இவ்வளவு நடந்தபின்பும் மல்லையாவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. லண்டனில் இருந்து வெளியாகும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் வங்கிகள் தன் மீது அபாண்டமாக பழி போட்டிருப்பதாக கூசாமல் குற்றம் சாட்டியிருக்கிறார். ‘நான் வாங்கிய கடன் கொஞ்சம்தான். ஆனால், பெரும் தொகையை அல்லவா திரும்பக் கேட்கிறார்கள்! கூட்டு வட்டி அடிப்படையில் என்னிடம் வட்டி கேட்பது என்ன நியாயம்?’ என்று அவர் கேட்டிருப்பதைப் பார்த்தால், மல்லையா கொஞ்சம்கூட மனம் வருந்தித் திருந்திய மாதிரி தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்