அப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்

?அப்ரூவல் இல்லாத வீட்டு மனையை வாங்கி வீடு கட்டத் தொடங்கிவிட்டோம். அப்ரூவல் வாங்க என்ன செய்ய வேண்டும்?

வேலுமணி,

த.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.

“நீங்கள் எந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை. அதாவது, நகராட்சியா, மாநகராட்சியா அல்லது பஞ்சாயத்தா, இதில் எந்தப் பகுதியில் நீங்கள் வீடு கட்டுகிறீர்கள்? நீங்கள் வீடு கட்டுவது கிராமமாக இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. அப்ரூவலை பஞ்சாயத்திலேயே கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆனால், சென்னை போன்ற நகரத்தில் வீடு கட்டி வந்தால், தற்காலிகமாக வீடு கட்டுவதை  நிறுத்தி வைத்துவிட்டு, அப்ரூவல் வாங்கியபின் வீடு கட்டுவதை தொடர்வது  நல்லது. உங்கள் ஏரியாவிலிருக்கும் உரிமம் பெற்ற அளவையாளரை (licensed surveyor) அணுகி, அவர் மூலமாக வரைபடம் தயாரித்து, விண்ணப்பங்களுடன்  கட்டட அனுமதி அளிக்கும் உரிய அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். சென்னை என்றால் மாநகராட்சி கமிஷனருக்கு விண்ணப்பித்து, அப்ரூவலுக்குரிய தொகையை கட்டி அப்ரூவல் பெறலாம். அதன்பிறகு கட்டடம் கட்டுவது நல்லது”.

? எனது மகன் ஆறாவது படித்து வருகிறான். அவனது உயர் கல்விக்காக மாதம் ரூ.5,000 வீதம் ஆறு வருடங்களுக்கு எதில் முதலீடு செய்யலாம்?

இளங்கோ,

த.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“மகனின் உயர் கல்விக்காக சேமிக்கும் உங்களின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. உங்களின் முதலீட்டுக் காலம் ஆறு வருடம் என்பதால், நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது உகந்ததாக இருக்கும். நீங்கள் பின்வரும் திட்டங்களில் பிரித்து முதலீட்டை மேற்கொள்வது நன்றாக இருக்கும். ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் (குரோத்) ரூ.2,000, யூடிஐ மிட்கேப் ஃபண்ட் (குரோத்) ரூ.1,500, ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.1,500. முதலீட்டின் நான்கு அல்லது ஐந்தாம் ஆண்டின் முடிவில் முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்