கச்சிதமாகத் திட்டமிட்டால் கவலைகள் இல்லை!

ஃபைனான்ஷியல் பிளான்கா.முத்துசூரியா

காலம் கற்றுத்தரும் பாடம் எப்போதுமே மறக்க முடியாததாக இருக்கும். இளமையில் பணம் பற்றிய கவலை இல்லாமலும் எதிர்காலம் குறித்த பயமும் இல்லாமல் திரிகிறோம். ஆனால், 45 வயதைத் தாண்டிய பிறகு எதிர்காலத் தேவைகள் நம்மை பயமுறுத்தத் தொடங்கிவிடுகின்றன.

அதன்பிறகுதான் நிதித் திட்டமிடல் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறோம். இதனை காலம் கடந்தபிறகு பிறக்கும் ஞானம் என்றே சொல்லலாம்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் தனது 49-வது வயதில் நிதித் திட்டமிடல் கேட்டு வந்திருக்கிறார். ‘‘இத்தனை நாட்களும் பொது வாழ்க்கை பற்றி கவலைப்பட்ட அளவுக்கு   என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கவலைப்படாமலே இருந்து விட்டேன். இனியாவது என் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நிதித் திட்டமிடல் அவசியம் என்று உணர்ந்து உங்களைத் தேடி வந்திருக்கிறேன்’’ என்று சொன்ன சிவக்குமார், மேற்கொண்டு தனது எதிர்பார்ப்புகளை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘என்னைப் போலவே, என் மனைவியும் வழக்கறிஞர்தான். திண்டுக்கல் நிதிமன்றத்தில்தான் எங்களுக்கு வேலை. எங்கள் இருவரின் வருமானம் சேர்த்து மாதம் ரூ.20,000-தான். வழக்கறிஞர் தொழிலில் வருமானம் குறைவு. அதிலும் சிறிய ஊர்களில் இருக்கும் எங்களைப் போன்றவர் களுக்கு இவ்வளவுதான் வருமானம் கிடைக்கிறது.

எனக்கு சொந்த வீடு இருக்கிறது. அதனால் வாடகை செலவு இல்லை. கோவை பல்லடத்துக்கு பக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அது வானம் பார்த்த பூமி. விவசாயத்துக்கு செய்யும் செலவுக்குக்கூட வருமானம் கிடைக்காததால், அந்த இடத்தை அப்படியே போட்டு வைத்திருக் கிறேன். இன்றைக்கு அந்த இடம் ஒரு ஏக்கர் சுமாராக ரூ.10 லட்சம் போகும்.

என் பிபிஎஃப் கணக்கில் சுமார் ரூ.15 லட்சம் இருக்கிறது. இது 2020-ல் மெச்சூர் ஆகும். என் மனைவியின் பெயரில் பிபிஎஃப்-ல் ரூ.10 லட்சம் இருக்கிறது. இது 2026-ல் மெச்சூர் ஆகும். இது போக வங்கி எஃப்.டி.யில் ரூ.10 லட்சம் இருக்கிறது. என் மகள் பெயரில் தனியாக ரூ.5 லட்சம் வங்கி எஃப்டியில் போட்டு வைத்திருக்கிறேன். இதுதவிர, பங்குச் சந்தையில் செய்த முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. பூர்வீக சொத்து மூலம் கிடைத்த வருமானம் மற்றும் நான் முன்பு மனித வள ஆலோசகராகப் பணியாற்றிய போது  கிடைத்த  வருமானங்களால் தான் இந்த அளவுக்கு என்னால் முதலீடு செய்ய முடிந்தது.  

எங்கள் மூவருக்கும் இப்போது ஆளுக்கு ரூ.50 ஆயிரம் கவரேஜ் கிடைக்கிற மாதிரி மெடிக்ளைய்ம் பாலிசி வைத்திருக்கிறேன்’’ என்றவர், தனது எதிர்காலத் தேவைகளைச் சொன்னார்.

‘‘இன்னும் மூன்று மாதத்தில் ரூ.6 லட்சம் செலவில் ஒரு கார் வாங்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றுவர இது உதவியாக இருக்கும். இதற்கான டவுன்பேமன்ட் கட்டுவதற்கான பணம்கூட என்னிடம் இல்லை என்கிற நிலையில் நான் எப்படி கார் வாங்கலாம்? என் இரண்டாவது தேவை, இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். இதற்கு சுமார் ரூ.10 லட்சம் (இன்றைய மதிப்பில்) ஆகலாம். இதற்கு என்ன செய்வது?

வக்கீல் தொழிலில் ஓய்வுக் காலம் இல்லை என்றாலும் என் 60-வது வயதில் இருந்து வக்கீல் தொழிலில் கிடைக்கும் வருமானம் தவிர, மாதம்தோறும் ஒரு வருமானம் கிடைக்க என்ன வழி என்பதைச் சொன்னால் நல்லது’’ என்று முடித்தார் சிவக்குமார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

‘‘மிஸ்டர் சிவா, உங்களுக்கு வருமானம் குறைவு என்றாலும் கூட, அதனை சரியாக நிர்வகிக்க தெரிந்திருக்கிறது. எல்லா இலக்கு களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்