நாணயம் லைப்ரரி: வேலையிலும் தொழிலிலும் வெற்றி தரும் விஷயங்கள்!

புத்தகத்தின் பெயர் : த வாவ் பேக்டர் (The Wow Factor)

ஆசிரியர் : பிரான்செஸ் கோல் ஜோன்ஸ் (Frances Cole Jones)

பதிப்பாளர் : Random House (USA)

இந்த வாரம் நாம் அறிமுகம் செய்வது பிரான்செஸ் கோல் ஜோன்ஸ் என்கிற  பெண்மணி எழுதிய ‘த வாவ் பேக்டர்’ என்னும் புத்தகத்தை. வியாபார ரீதியான இந்த உலகில் நீங்கள் செய்யவேண்டிய மற்றும் செய்யக் கூடாத 33 விஷயங்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டு உள்ள இந்தப் புத்தகம் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் வெற்றியைத் தரும் என்கிறார் ஆசிரியை. 

இந்தக் காலத்தில், நேர்காணலுக்கு சென்றபோது எந்தளவுக்கு தயாராக இருந்தீர் களோ, அதே போன்றே வேலையில் இருக்கும் ஒவ்வொரு விநாடியும் இருக்க வேண்டி உள்ளது. ஏனென்றால், நாளைக்கு தொழிலில் வரப்போகும் மாறுதல் குறித்து உங்களுக்கு நேற்றே தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன நிர்வாகங்கள். அது மட்டுமா, நிர்வாகங்கள் படைப்பாற்றல், மாறிக்கொள்ளும் திறன், விடாமுயற்சி என்ற மூன்றும் தனது பணியாளர் களிடம் அதிகமாகவே  இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

சாதாரண சூழ்நிலைகளிலேயே இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன எனில்,  பொருளாதார மந்தநிலையும், சிக்கல்களும் இருக்கிற நேரத்தில் சொல்லவேண்டியதே இல்லை. ஓட்டப்பந்தயத்தில் ஒரு சில மணித்துளிகள் மட்டுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதைப் போல், மந்தமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தில் ஒருவர் அவருடைய வேலையை தக்கவைத்துக்கொள்வதும் அல்லது கொள்ளாததும் மிகச் சிறிய வித்தியாசத்தினாலேயே தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எந்த விஷயத்தில் நீங்கள் பின்தங்கியுள்ளீர்கள் என்பதைக் கொஞ்சம் உற்றுநோக்குங்கள். அதில் ஏதாவது ஒரு விஷயத்தை (ஒரே ஒரு விஷயத்தை) இன்றிலிருந்து ஒரு மாதத்தில் சரி செய்வேன் என்ற முனைப்புடன் செயல்பட ஆரம்பியுங்கள்.

உதாரணத்துக்கு, போனில் கூப்பிட்ட ஆளைத் திரும்ப அழைக்கும் பழக்கமே என்னிடம் இல்லை என்று சொல்பவரா நீங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இந்த நிலையை மாற்றுவேன் என்று தீர்மானிக்கிறீர்கள் ஆரம்பத்தில். இயன்ற அளவு கூப்பிட ஆரம்பிக்கிறீர்கள். ஒரு மாதம் தொடர்ந்து இதைச் செய்துவந்தால் அது ஒரு பழக்க மாக மாறிவிடும் இல்லையா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்