கேட்ஜெட்ஸ்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஹார்மன் கார்டன் ஒன்: (Harman Kardon One)

சமீப காலமாக புளூ-டூத் ஸ்பீக்கர்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது. எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பம், ஒயர் எதுவும் இல்லாமல் இணைக்கும் தன்மை ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணங்கள்.

ஹார்மன் கார்டன் புகழ் பெற்ற ஜேபிஎல் நிறுவனத்தின் ஒரு அங்கம். ஜேபிஎல் நிறுவனம் பட்ஜெட் கேட்ஜெட்களை தயாரிக்க, ஹார்மன் கார்டன் நிறுவனம் பிரீமியம் கேட்ஜெட்களை தயாரிக்கிறது. இதன் சமீபத்திய வெளியீடு, இந்த ஹார்மன் கார்டன் ஒன் ப்ளூ-டூத் ஸ்பீக்கர். உலக அளவில் ஹெச்டிசி ஒன் M9 ஸ்மார்ட் போனோடு இந்த ஸ்பீக்கர் வெளியிடப் பட்டது. இந்த காரணத்தால், டிசைன் அளவில் ஹெச்டிசி நிறுவனத்தின் பங்களிப்பை பார்க்கலாம்.

மேலும், இது ஹெச்டிசி கனெக்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஹெச்டிசி கேட்ஜெட்டைக் கொண்டும் இந்த ஸ்பீக்கரை எளிதாகப் பயன்படுத்தலாம். ஹெச்டிசி கேட்ஜெட்களை தவிர, அனைத்து பிராண்ட்களின் கேட்ஜெட்களைக் கொண்டும் இந்த புளூ-டூத் ஸ்பீக்கரை கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

புளூ-டூத் தவிர, என்எஃப்சி மூலமும் இந்த ஸ்பீக்கரை இணைத்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு பிரமாதமாகக் காட்சி அளிக்கும் இந்த புளூ-டூத் ஸ்பீக்கர், முழுக்க முழுக்க மெட்டல் பாடியைக் கொண்டுள்ளது. பவர் ஆன்/ஆஃப், புளூ-டூத், கால்கள், வால்யூம் ஆகியவற்றை இந்த ஸ்பீக்கரில் எளிதாக இயக்கலாம். ஸ்பீக்கரில் இருக்கும் மைக்ரோபோனைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் போன்கால்களை எளிதாக அட்டென்ட் செய்து பேசலாம்.

513 கிராம் எடையுள்ள இந்த  ஸ்பீக்கர், 2000mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இந்த பேட்டரி, 6 மணி நேரம் வரை தாங்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டு 40மி.மீ டிரைவர்களும் தனித்தனியே 6W வெளியீடைக் கொண்டுள்ளது. புளூ-டூத் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர், தெளிவான மற்றும் வலுவான ஒலியை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், சப் பாஸ் (sub-bass) ஒலி சற்று ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

இதன் இந்திய விலை ரூ.14,990

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்