கோயில் திருவிழாக்களில் கொழிக்கும் பிசினஸ்!

கு.ராமகிருஷ்ணன்

கோயில் நகரங்கள், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு எப்போதும் வருமானம் ஈட்டித் தரக்கூடிய ஆதாரங்களாகவும் விளங்கி வருகின்றன. முக்கியமான கோயில்களில் திருவிழாக்கள் தொடங்கி விட்டால் சிறப்பு சந்தைகள் களைகட்டத் தொடங்கிவிடும். கோயிலைச் சுற்றியும் திருவிழா நடக்கும் இடத்திலும் நிரந்தர மற்றும் தற்காலிக தொழில்கள்  ஜோராக நடக்கும். இது இன்றோ, நேற்றோ தொடங்கியது அல்ல. கோயில்கள் மற்றும் திருவிழாக்கள் மூலம் அந்தந்த நகரங்களில் வசிப்பவர்களுக்கு வருமானம் கிடைப்பதற்காகத்தான் இப்படி கோயில் சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். இதனால்தான் ஆலயங்கள் இன்றும் அமுதசுரபிகளாகத் திகழ்கின்றன.

சபரிமலை, திருப்பதி, பழனி, வேளாங்கண்ணி, நாகூர், மதுரை என எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்த தலங்களிலும் சரி, விழாக்கால கொண்டாட்டங் களிலும் சரி, ஏராளமான பிசினஸ்கள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தின்போது மலையின் சுற்றுப்பாதை முழுவதும் பல தொழில்கள் பட்டையைக் கிளப்புவதைப் பார்க்கலாம். கார்த்திகை சபரிமலை சீசன் ஆரம்பித்து விட்டால் ஒவ்வொரு சிறுகுறு நகரங்களிலும்கூட மாலை போடுவதற்கான பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கும். ஆலயங்கள் அமைந்து உள்ள நகரங்களில் வியாபாரம் இன்னும் வேகமாக நடக்கிறது. வணிகத்தில் கொடிக்கட்டி பறக்கும் சில கோயில் நகரங்களைப் பார்ப்போம்.

முதலில் பழனி நகரை வலம் வருவோம். பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தொடங்கி வைகாசி வரை பெரும்பாலான நாட்கள் விஷேச நாட்கள். லட்சக் கணக்கான மக்கள் பழனி ஆண்டவரை தரிசிக்க வருவார்கள். இந்தக் காலத்தில்  கிரிவல பாதை, சன்னதி ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளில் விற்பனை அனல் பறக்கும். சுமார் 1500-க்கும் அதிகமான கடைகள் இந்த வர்த்தகத்தின் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்