பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் : ஒரு வழியாக  நிஃப்டி 8000 புள்ளிகளை தாண்டி விடும் என எதிர்பார்த்தோம். ஆனால்,  எஃப் அண்ட் ஓ முதிர்வு தினமான வியாழன் அன்று  நிஃப்டி சரிவடைந்தது .

கடந்த  வெள்ளிக்கிழமை அன்று  வர்த்தகத்தில் பெரிய மாற்றமில்லை.  வெள்ளிக்கிழமை மே மாத கான்ட்ராக்ட்களுக்கான புதிய செட்டில்மென்ட் ஆரம்பமானது.

இருந்தாலும் சந்தை ஒரு மந்தை நிலையில்தான்  காணப்பட்டது. இதனால், நடப்பு வாரத்தில் சந்தை சுணக்க நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில்,  நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி - யின் வலிமையான ரெசிஸ்டன்ஸ் நிலையான 8000 மற்றும் 17000-லிருந்து வலிமையான இறக்கம் ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் குறைந்தபட்ச ரெசிஸ்டன்ஸ் ஆன 7830 மற்றும் 16600-க்கு கீழே இறங்கவும் இல்லை. இதனால் சந்தையின் போக்கை கணிப்பது கடினமாகும்    

இது போன்ற நிலைகளில்  சந்தையின் டிரெண்டை பின்பற்றுவதே நல்லது. அந்த வகையில், நாம் அண்மை சப்போர்ட் நிலைகளான 7830 மற்றும் 16600 உடைக்கப்படும் வரை காளை சந்தை தொடரும் என எதிர்பார்க்கலாம். 

இந்த நிலை உடைக்கப்பட வில்லை என்றால், சந்தை கடந்த வார உச்சத்தை அடைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலை உடைக்கப் பட்டால், 7650 மற்றும் 16200 வரை சப்போர்ட் இல்லாததால்  சந்தை சரியும்.

எனவே, வாரத்தின் முதல் நாள் இண்டெக்ஸ்களின் மாற்றத்தை கவனித்து அதற்கு ஏற்ப முதலீட்டு உத்தியை முடிவு செய்வது நல்லது. சந்தையின் ஏற்றம் அல்லது இறக்கத்துக்கு ஏற்ப தயாராக இருப்பது நல்லது.

பாட்டா இந்தியா  (BATAINDIA)

தற்போதைய விலை : ரூ.  584.20

வாங்கவும்


கடந்த வாரங்களில் பாட்டா  இந்தியா பங்குகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த  வண்ணமே இருந்தது. இந்தப் பங்கு அதன் பிவெட் ரெசிஸ்டன்ஸை கடந்து வர்த்தக மாகி வருவது,   முதலீட்டாளர்கள் வாங்குவதில் தீவிரமாக இருப் பதையே  குறிக்கிறது. அதோடு ஒரு ரவுண்டிங் பேட்டர்ன்  உருவாகி இருப்பதையும், சார்டில் பார்க்க முடிகிறது.

இந்தப் பங்கை  அதன் தற்போதைய நிலையில் வாங்கலாம். 575 ரூபாய் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும். இந்தப் பங்கின் விலை வரும் வாரத்தில்  610 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ்  (CENTURYTEX)  

தற்போதைய விலை : ரூ. 638.45

வாங்கவும்


பாட்டா  இந்தியா பங்குகளைப் போலவே, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வருகிறது. இந்த விலை உயர்வு செஞ்சுரி டெக்ஸ்டைல் பங்கில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பங்கு புதிய வேகத்தில், அதிக வால்யூமோடு விலை அதிகரித்ததை பார்க்க முடிந்தது.

இந்த விலை ஏற்றம் ரூபாய் 665 வரை தொடர வாய்ப்பிருக்கிறது. எனவே, 632 ரூபாயை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு லாங் பொசிஷன் எடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்