நிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகள் பாசிட்டிவ்வாக வந்தால் திடீர் ஏற்றங்கள் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

7980 என்ற லெவலின் மீது கவனம் வையுங்கள் என்றும் செய்திகள், ரிசல்ட்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அதிகமான கவனத்துடன் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தினை தவிர்க்க வேண்டும் என்றும்  அதே போல் ஓவர்நைட் பொசிஷன்களையும் முழுமையாக தவிர்ப்பதே நல்லது என்றும் 7980 என்ற லெவல்தனை வால்யூமுடன் தாண்டி இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் நடக்காத வரையில் மேல்நோக்கிய வேகமான மூவ்கள் வருவதற்கான வாய்ப்பு கள் குறைவே எனலாம் என்றும் சொல்லி இருந்தோம்.

இண்ட்ரா டேயில் அதிக பட்சமாக 7992 வரை  சென்ற நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 49 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

பெரிய அளவிலான பொருளாதார டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரத்தில் நுழைய இருக்கிறோம். செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் இவற்றின் மீது கவனம் வைத்தே வியாபாரம செய்யவேண்டியிருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களாக சொல்லிவருவதைப் போல, 7980 என்ற லெவல் ஒரு கடுமையான ரெசிஸ்டன்ஸாக உருவாகி வருகிறது. இதனைத் தாண்டி வால்யூமுடன் கூடிய  இரண்டுக் கும் மேற்பட்ட குளோசிங்குகள் வராத வரை ஏற்றம் தொடர்வதற் கான வாய்ப்புகள் குறைவே. எனவே, தற்போதைக்கு இந்த லெவலைக் கண்காணித்துக் கொண்டே வியாபாரம் செய்து வரவேண்டும். செய்திகள் தொடர்ந்து பாசிட்டிவ்வாக வரும்பட்சத்தில் 8300லெவல்கள் வரையிலான திடீர் ஏற்றங்கள் வந்துவிடக்கூடும்.

பொதுவாக, டிரேடர்கள் நிஃப்டியில் வியாபாரத்தை குறைத்து, நல்ல பண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் கூடிய லாங் சைட் வியாபாரத்துக்காக  மட்டுமே சந்தையை ட்ராக் செய்யலாம்.

வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது. ஓவர்நைட் பொசிஷன் களை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய வாரம் இது. கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப் பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்