டிரேடர்களே உஷார் - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
லாங்குன்னா, லாங்கு..! தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“ஹலோ, ரமேஷா...   டேய் ரமேசு, நான்தான்டா சோமு பேசறேன். இந்த குரூட் ஆயில் தொடர்ந்து 2610க்கு 2620க்கு உள்ளாரவே சுத்துதே...” 

“அப்படியா..!”

“ஆமாண்டா.  என்ன பண்றதுன்னே தெரியல.       2610-லிருந்து ஏறுது; 2620 கிட்டே போகும்போது வாங்கலாம்னு தோணுது. அப்படி நினைக்கிறப்பவே, அது 2618,    2616-ன்னு இறங்கிடுது. அப்புறம் வாங்க பயமா இருக்குது.”

“அப்ப ஷாட் அடி.”

‘‘எப்படிடா... ஷாட் அடிக்கிறது? அது அப்படியே 2614, 2612 அப்படின்னு வேகமாக இறங்கிடுது. ஷாட் அடிக்கலாம்னு போடறப்ப அது 2610-ல நிக்குது. அந்த விலையில ஷாட் அடிக்க மனசு வரமாட்டேங்குதுடா.’’

“அப்ப ஒண்ணு பண்ணு, அது 2620-ஐ கட் பண்ணி மேல போவட்டும் அப்ப வாங்கு.”

“தாங்ஸ் ரமேஷ்.”

முதலில் சோமுவை பற்றி சில வார்த்தைகள்... சோமு,  ஒரு பிரைவேட் கம்பெனியில மாதம் ரூ.12,000- சம்பளத்தில் வேலை பார்க்கிறார். எப்படி யாவது, எக்ஸ்ட்ராவாக ஒரு  வருமானத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து  ஐந்து ஆண்டுகளாக கமாடிட்டியில் டிரேட் செய் கிறார். காலையில் வேலைக்கு போவார்; சாயங்காலம் 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்ததும், லேப் டாப்பை எடுத்துக் கொள்வார். மாலை 6.30-ல் இருந்து ராத்திரி 11.30 வரை  கமாடிட்டி வியாபாரம்தான்.

சோமு, டிரேடிங் ஸ்கீரினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். குரூட் ஆயில் விலை தொடர்ந்து 2610 -  2620-க்கும் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

சோமுவுக்கு கொஞ்சம் போரடித்தது. ‘என்னடா இது, நகரவே மாட்டேங்குது’ என்று மனதில் சலித்துக்கொண்டார்.  ஆனாலும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க நினைத்தார். அவர் பொறுமை வீண்போகவில்லை.

குரூட் விலை  2620-ஐ உடைத்து ஏறியது. 2621 – 2622.  சோமு மனசு படபடக்க ஆரம்பித்தது.  ‘சோமு, குயிக், சீக்கிரம் வாங்கு.’  2622-ல  ஆர்டரை போட்டார். விலை அதற்குள் 2622 – 2623-க்கு  மாறியது. மனசுக்குள் அலாரம் அடித்தது. ‘சோமு சீக்கிரம் மாத்திப் போடு.’ மீண்டும் விலை சர்ரென்று ஏற ஆரம்பித்தது.

விலை 2623 – 2624 - 2625 -  2626, 2627 என நெட்டாக ஏறி 2628-ல் நின்றது. ‘சோமு வாங்குடா...’  என்று மனசு பரபரத்தது. 

சோமு  டக்கென்று ஆர்டர் போட்டார்.  2628-ல் வாங்கிட்டார்.  மனசு நிம்மதியானது.  ‘அப்பாடா எப்படியோ வாங்கிட்டோம்!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்