பிசினஸ் சீக்ரெட்ஸ் - 41: தெரிந்த தொழிலைச் செய்யுங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏ.ஆர்.குமார்

வின்கேர் சி.கே.ரங்கநாதனுடன் தொழில்முனைவோர்கள்  நடத்திய கலந்துரையாடலின்  ஒருபகுதியை கடந்த இதழில் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சி...

ஸ்ரீராம் ரவீந்திரன், சி.ஓ.ஓ., அஸ்ஸென்ஸ் (Ascens) : ‘‘என் பிசினஸில் நான் பிரைவேட் ஈக்விட்டியிடமிருந்து முதலீட்டைப் பெற நினைத்தால், பல கண்டிஷன்களை அவர்கள் போடுகிறார்கள். முக்கியமாக, பங்குகளை அதிகமாகக் கேட்கிறார்கள். அந்தப் பங்குகளையும் எங்கே, எப்படி யாருக்கு விற்க வேண்டும் (Liquidate) என்பது பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு கண்டிஷன்களை விதிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது?’’ 

சி.கே.ஆர் : ‘‘அவர்கள் அப்படி கண்டிஷன் போடத்தான் செய்வார்கள். எந்த கண்டிஷனை ஏற்றுக் கொள்ள முடியுமோ, அந்த கண்டிஷன்களுக்கு மட்டுமே ஒகே சொல்லுங்கள். நன்கு யோசித்து ஒருமுறை ஓகே சொல்லிவிட்டால், அதை முடிந்தவரை கடைபிடிப்பது அவசியம். அவர்கள் போடுகிற எல்லா கண்டிஷன்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை; ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதும் இல்லை. அவர்கள் மலையைக் கேட்பார்கள். நம்மால் மடுவைத்தான் கொடுக்க முடியும் என்று சொல்லலாம். எல்லாமே பேசுவதில்தான்        (Negotiation) இருக்கிறது.

ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் உங்களுக்காக முதலீடு செய்திருப்பவர்கள். வேகமான வளர்ச்சிக்கு அவர்கள் சொல்லும் யோசனைகள் உங்கள் பிசினஸை வளர்க்கவே உதவும். உங்கள் பிசினஸ் வேகமாக வளர்ந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையைவிட, உங்களுக்குக் கிடைக்கும் நன்மை அதிகமாக இருக்கும். எனவே, இதை நமக்கு பிரஷர் கொடுக்கும் விஷயமாக பார்க்காமல், பாசிட்டிவ்-ஆக பார்த்தால், நமக்கும் நன்மை;  அவர்களுக்கும் நன்மை.’’ 

ஸ்ரீராம் ரவீந்திரன்: ‘‘ஒரு பிசினஸில் எப்போது பிரைவேட் ஈக்விட்டியிடமிருந்து முதலீட்டைப் பெறலாம்? காரணம், பணமும் தேவை. அதே நேரத்தில், பங்குகளை விட்டுத் தரவும் தயக்கம் என்கிறபோது நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்?’’

சி.கே.ஆர் : ‘‘ஏன் பணம் தேவை என்று நினைக்கிறீர்கள்? நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வேகமாக கொண்டு செல்லத்தானே? நிறுவனத்தை வேகமாக வளர்க்கத் தேவையான பணம் உங்களிடம் இல்லை எனில், வேறு ஒரு நிறுவனம் உங்களுக்குப் போட்டியாக வந்து, உங்கள் மார்க்கெட் ஷேரை எடுத்துக்கொண்டு விடலாம். இதனால் உங்கள் வளர்ச்சி தடைபடலாம்.

 எனவே, வளர்ச்சிதான் முக்கியம் என்று நினைக்க வேண்டுமே தவிர, சில சதவிகித பங்குகளை விட்டுத் தருவதில்  தயக்கம் காட்டக் கூடாது. உங்களுக்கு போட்டியாக யாரும் இல்லை எனில், நீங்கள் எந்தக் கவலையுமின்றி மெதுவாக வளர்ச்சி அடையலாம். ஆனால், எந்த நேரத்திலும் நீங்கள் இருக்கும் இடம் கேள்விக்கு உள்ளாகலாம் என்கிறபோது, வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுப்பதே நல்லது’’.

ஆர்.எஸ்.பிரபாகர், இயக்குநர், தையோ ஃபீட் மில் பிரைவேட் லிமிடெட் : ‘‘நான் செல்லப் பிராணிகளுக்கு தேவையான உணவுகளைத் தயாரிக்கும் பிசினஸை செய்து வருகிறேன். இப்போது எனக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு ஆஃபர் வந்திருக்கிறது. அதாவது, செல்லப் பிராணிகளுக்குத் தேவையான உணவு வகைகளை விற்கும் ஸ்டோர்களை நடத்தத் தேவையான முதலீட்டை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இதற்குப் பதிலாக, எனது நிறுவனத்திலிருந்து சில சதவிகித பங்குகளை கேட்கிறார்கள். எனக்கு இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கிறது?’’

சி.கே.ஆர் : ‘‘அவர்கள் சொல்கிற மாதிரி, செல்லப் பிராணிகளுக்குத் தேவையான உணவுகளை விற்கும் ஸ்டோர்களைத் திறந்தால் விற்பனை நன்றாக நடக்குமா, அதற்கான சந்தை இருக்கிறதா, அதைச் செய்யும் திறமை நமக்கு இருக்கிறதா, விற்பனை செய்வது நீங்கள் இப்போது செய்யும் தொழிலிருந்து விலகிச் செல்வது போல இருக்குமா என்கிற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

காரணம், நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்பது வேறு. விற்பனை செய்வது என்பது வேறு. உங்களுக்கு உற்பத்தி செய்வதில் பலம் அதிகம் எனில், அதிலேயே கவனம் செலுத்தி இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய முடியுமா என்றுதான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, யாரோ ஒருவர் பணம் போடத் தயார் என்பதற்காக இப்போது நாம் செய்கிற வேலையிலிருந்து நம் கவனத்தைத் திருப்புகிற மாதிரி வேறொரு வேலையை செய்ய வேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால், அந்த ஆஃபரை இப்போதைக்கு வேண்டாம் என்பதே சரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்