கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

மு.சா.கெளதமன்

தங்கம்!

கடந்த வாரத்தில் தங்கத்தின் ஜூன் மாத கான்ட்ராக்ட் (10 கிராம் தங்கத்தின்) விலை 30,300 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி வியாழக்கிழமை மாலை வரை சுமாராக ரூ.29,897   வரை தொடர்ந்து நான்கு நாட்களும் இறக்கத்திலேயே வர்த்தகமானது. வெள்ளிக்கிழமை மட்டும்  திடீரென சுமாராக ரூ.200-க்கு மேல் விலை அதிகரித்து ரூ.30,120 ரூபாய்க்கு கேப் அப்பில் ஓப்பனாகி தொடர்ந்து வெள்ளிக் கிழமை மாலை நேர வர்த்தக நேரத்தில் ரூ.30,235-க்கு மேல் வர்த்தகமானது.

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அடுத்த கூட்டத்தில் ஃபெட் ரேட் உயர்த்தப்படும் என்பதால், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கத்தில் வர்த்தகம் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். அதோடு சீனாவின் தங்க சங்கம் (China Gold Association) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ன் முதல் காலாண்டில் சீனாவின் தங்கத்தின் இறக்குமதி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட 3.91 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம்.

அதோடு கடந்த வார வெள்ளிக்கிழமை கேப் அப்பில் வர்த்தகம் தொடங்கியது, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தங்கத்தின் ஜூன் மாத கான்ட்ராக்டின் விலை ஒரு சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருப்பதால் அடுத்த வாரமும் விலை அதிகரித்து வர்த்தகமாகலாம். இருப்பினும் அடுத்த வாரத்தில் டிரெண்ட் எப்படி தொடர்கிறது என்பதை பார்த்து வர்த்தகத்தை மேற்கொள்வது நல்லது.

வெள்ளி! 

கடந்த வாரத்தில் வெள்ளியின் ஜூலை மாத கான்ட்ராக்ட்  (ஒரு கிலோ வெள்ளி) ரூ.42,319-க்கு வர்த்தகமாகத் தொடங்கி வியாழக்கிழமை வரை இறக்கத்திலேயே வர்த்தகமானது. இந்த இறக்கம் ரூ.41,227 வரை குறைந்து வர்த்தகமானது. கடந்த வாரம்  வெள்ளியன்று மட்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி ரூ.41,507  வரை அதிகரித்து வர்த்தகமானது.

கடந்த வாரத்தில் வெளியான ஒரு அறிக்கையில் வெள்ளிக்கான தேவை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த தாகவும், இந்த ஆண்டு போட்டோ வோல்டிக் தொழிற்சாலை தேவைகள், வெள்ளி ஆபரணங்கள், வெள்ளிக் காசுகள் என்று அனைத்து தரப்பை சேர்த்தும் வெள்ளிக்கான தேவை குறைந்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது. தங்கம் - வெள்ளிக்கான ரேஷியோ சற்றே அதிகரித்து, 76 புள்ளிகளில் இருக்கிறது. எனவே, அடுத்த வாரத்திலும் வெள்ளிக்கான விலை பக்கவாட்டில் வர்த்தகமாக அதிக வாய்ப்பிருக்கிறது. வெள்ளியின் விலையை நேரடியாக பாதிக்கும் செய்திகள் வந்தால் இதன் டிரெண்ட் மாறி விலை அதிகரிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்