புதிய திவால் சட்டம் கறாராக செயல்படட்டும்!

ஹலோ வாசகர்களே..!

கடந்த பல மாதங்களாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்த திவால் சட்டமானது (Insolvency and Bankruptcy Bill-2015), சென்ற வியாழன் அன்று மக்களவையில் நிறைவேறி இருக்கிறது. கூடிய விரைவில் மாநிலங்களவையிலும் இந்த சட்டம் எந்தச் சிக்கலும் இல்லாமல் நிறைவேறும் என்று நம்புவோம்.

இன்றைய தேதியில் வங்கிகள் ஒரு நிறுவனத்துக்கு கடன் தந்துவிட்டு, அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதற்கு மல்லையா விவகாரம் ஒன்றே போதும். நம் நாட்டில் திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பாக சர்பாஸி உள்பட 12 சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்கள் நூறு ஆண்டுகள் பழமையானவை. காலமாற்றத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படாத இந்த சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி, பல தொழிலதிபர்கள் எளிதாக தப்பிவந்தனர். இனி அவர்கள் தப்பிக்கும் வழிகளை அடைத்து, அவர்களிடமிருந்து கறாராகக் கடன் பணத்தை வசூலிக்க இந்த புதிய திவால் சட்டம் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்