ரூ.2 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.4,000 வருமானம் சாத்தியமா?

?இரண்டு லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த முதலீட்டுக்கு மாதம் ரூ.4,000 தருகிற ஃபண்டுகளை பரிந்துரை செய்ய முடியுமா?

 ராஜா,

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.


“நீங்கள் கேட்கும் மாத வட்டி ரூ.4,000 என்பது 24% வருமானம் ஆகும், எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்டிலும் இந்த அளவுக்கு அதிக வருமானத்தை  எதிர்பார்க்க முடியாது. 10% முதல் 12% வருமானம் தரக்கூடிய கார்ப்பரேட் பாண்டுகள் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரூ.2 லட்சம் முதலீடு என்கிறபட்சத்தில் மாதம் 1,000 ரூபாயை திரும்ப பெறும் திட்டத்தின் (systematic withdrawal) மூலம் பெறலாம்.”

?     விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ஃபார் டிரேட் என்கிற முறையில் இஸட் (Z) குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான். இதை விளக்கிச் சொல்ல முடியுமா?

@ விக்ரம்,

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ருபீடெஸ்க் கன்சல்டன்சி.


“இஸட் தர நிறுவனங்கள் என்பவை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கிற நிறுவனங்களைக் குறிக்கும். மேலும், சிடிஎஸ்எல்(CDSL) அல்லது என்எஸ்டிஎல்(NSDL)-ல் பங்குகளை டீமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும். இந்த வகை பங்குகள் ரிஸ்க் மிகுந்தவையாகவும் இருக்கலாம். முதலாவதாக, இந்த நிறுவனங்களைப் பற்றிய போதுமான தகவல்கள் பங்குச் சந்தைகளில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இவற்றைக் கண்காணிப்பது மிகவும் கடினம். இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும்.

இது, இந்த நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider      Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும். மூன்றாவதாக, இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கும். இந்த வகையான பங்குகள் டிரேட் ஃபார் டிரேட் என்கிற முறையில் ‘இஸட்’ குரூப்பில் வர்த்தகமாகும். ‘டிரேட் ஃபார் டிரேட்’ என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே வர்த்தகமாகும். அதாவது, இந்தப் பங்குகளில் தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது.”

?    நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன?

@ சிவக்குமார்,

எம்.எஸ்.ஓ அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.


“பிரைமரி சந்தை (primary market), செகன்டரி சந்தை (Secondary market), பொதுப் பங்கு வெளியீடு (Initial    Public Offer) வழியாக பங்குகளில் முதலீடு செய்யலாம். அது மட்டுமல்லாமல் பங்கை வாங்கி விற்கும் வர்த்தகமும் (டிரேடிங்) செய்ய முடியும். பங்கு வர்த்தகம் செய்ய செபியிடம் அங்கீகாரம் பெற்ற  ஷேர் புரோக்கர் அல்லது சப் புரோக்கரரிடம், உறுப்பினர் கணக்கு, டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். கணக்கு தொடங்கும்போது கீழ்க்காணும் ஆவணங்கள் அவசியமானவை. நிரந்தர முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் காசோலைகள் அவசியம் தேவை.”

?    என் வயது 30. என் ஓய்வுக்காலத் தேவைக்காக மாதம் ரூ.2,000 வீதம் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய இருக்கிறேன். நல்ல ஃபண்டுகளை சொல்லுங்கள்.

 பிரசன்ன சுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்