வங்கி டெபாசிட் வளர்ச்சி குறைவுக்கு என்னதான் காரணம்?

ஜெ.சரவணன்

இந்திய மக்களின் நூறு சதவிகித நம்பிக்கை பெற்ற ஒரு முதலீடு உண்டு என்றால் அது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்தான். அதனால்தான் நம்மில் பலரும் வங்கி எஃப்.டி. முதலீட்டை தவறாமல் வைத்திருக்கிறோம்.

ஆனால், கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு 2015-16-ம்  நிதி ஆண்டில் ஃபிக்ஸட் டெபாசிட்டின் வளர்ச்சியானது கடுமையாகக் குறைந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

2016 மார்ச் மாத முடிவில்   2015-16-ம் நிதி ஆண்டின் வங்கி வைப்பு நிதி வளர்ச்சி வெறும் 9.9 சதவிகிதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இதுவே முந்தைய நிதி ஆண்டில் இந்த வளர்ச்சி 10.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2006-07-ம்  நிதி ஆண்டில் வங்கி வைப்பு நிதியின் வளர்ச்சியானது 23.84  சதவிகித மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒற்றை இலக்கத்தில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி  1962-63-க்குப் பிறகு 2015-16-ல் வந்துள்ளது. ஏன் இந்த வீழ்ச்சி? மக்களின் வருமானம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளில் செய்யப்படும்  ஃபிக்ஸட் டெபாசிட்கள் குறைய என்ன காரணம் என்கிற கேள்விகளை சென்னைப் பல்கலைக்கழகப் எக்னாமெட்ரிக்ஸ் துறை பேராசிரியர் சீனுவாசனிடம் கேட்டோம். விளக்கமான பதிலைச் சொன்னார் அவர்.

“கடந்த காலத்தில் வங்கி டெபாசிட்டானது உத்தரவாத மான, பாதுகாப்பான, ரிஸ்க் இல்லாத வருமானத்துக்காக  மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல், மக்களின் வாழ்வியல் மற்றும் செலவு முறைகள் எளிமை யாக இருந்தன. தேவைகள் அதிகம் இல்லாததால், நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் இன்று மக்களின் சேமிப்பு, செலவு, முதலீடு போன்ற வற்றுக்கான மனநிலை முற்றிலும் மாறியதற்குக் காரணம், பொருளாதாரமும், நுகர்வோர் சந்தையும்தான்.  

தவிர, பணப்புழக்கமானது தொடர்ந்து குறையாமலே இருக்கிறது. 2014-15-ல் பணப் புழக்கத்தின் வளர்ச்சி 11.32 சதவிகிதமாக இருந்தது. 2015-16-ல் அது 14.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே, மக்களின் வருவாய் அதிகரித்துள்ளது.   ஆனால், வங்கிகளில் செய்யப் படும் டெபாசிட் வளர்ச்சி குறைவாக உள்ளது.   அதேபோல், வீடுகளில் உள்ள சேமிப்பும் குறைவாகவே உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்