ஃபைனான்ஷியல் பிளான்: எந்தக் கவலையும் இல்லாத எதிர்காலத்துக்கு ஈஸி பிளான்!

கா.முத்துசூரியா

‘‘எனக்கு சொந்த ஊர் பெரம்பலூர். தற்போது பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். குடும்பத்துடன் பெங்களூருவில்தான் வசிக்கிறேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜேஷ் கண்ணனுக்கு வயது 38.

உடல் நலத்தை கட்டுக்குள் வைக்க வாக்கிங் போகிறவர்கள், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள கோயிலுக்கு போகிறவர்கள், பணத்தை நிர்வகிக்க, எதிர்காலத்தை திட்டமிட  அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை. சரியாக திட்டமிட்டவர்களுக்கு பெரிய அளவில் பண கஷ்டங்கள் வராது என்பதை உணர்ந்து கொண்டவர்களே நிதி ஆலோசனைக்கு தயார் ஆகிறார்கள்.

வளர்ந்த நகரங்களில் இயல்பாகவே மக்களிடம் முதலீட்டு ஆர்வமும், நிதித் திட்டமிடல் விழிப்பு உணர்வும் மிக அதிகம். பெரம்பலூர் போன்ற நகரங்களில் இருந்து ஃபைனான்ஷியல் பிளான் கேட்டு வருகிறவர்கள் சொற்பமானவர்களே. அந்த வகையில் பெரம்பலூர் நகரத்திலிருந்து ஆலோசனை கேட்டு வந்த ராஜேஷ் கண்ணனை கைகுலுக்கி வரவேற்போம். ராஜேஷ் தொடர்கிறார்...

‘‘என் மனைவி வித்யாவும் இன்ஜினீயரிங் படித்தவர்தான். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லவில்லை. முதல் குழந்தை தர்ஷ்ணாஸ்ரீக்கு 6 வயது. முதல் வகுப்பு படிக்கிறாள். அடுத்து சாய்சர்வேஷ். இப்போதுதான் 6 மாதம் ஆகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்