விவசாயத்தில் பின்தங்கும் தமிழகம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்

சோ.கார்த்திகேயன்

மிழகத்தின் மிகப் பெரிய தேர்தல் திருவிழாவான சட்டமன்ற தேர்தல் வரும் மே 16-ம் தேதி அன்று நடக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளதாக கூறி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழகம் திமுக ஆட்சியில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால், அதிமுக ஆட்சியில் வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளதாகச் சொல்கிறார். விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் தமிழகம் படுமோசமான வளர்ச்சியை சந்தித்து வருவதாகக் கூறி வருகின்றனர். உண்மையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது?

தமிழகம் டாப்!

இந்தியாவை விடவும், மாநில அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவை விடவும் தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாகவே உள்ளது. எனினும், நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முந்தைய நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் தொய்வடைந்த நிலையில்தான் காணப்படுகிறது. தமிழகத்தில் முக்கிய துறைவாரியாக வளர்ச்சி விகிதம் மோசமான நிலையிலேயே  உள்ளது.

மைனஸ்-ல் வளர்ச்சி!

தமிழகத்தில் இந்தத் துறைவாரியாக பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது நிலையான வளர்ச்சியில் இல்லை. சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் ஏற்ற இறக்கத்திலும், சில ஆண்டுகளில் மைனஸ் ஆகவும் இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. குறிப்பாக, விவசாயத் துறையின் வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி (பார்க்க அட்டவணை - 1) ஒரளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்பதை காணலாம்.

இதே போல, தொழில் துறை வளர்ச்சி (பார்க்க, அட்டவணை 2) கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்