கம்பெனிகளின் கணிப்பைத் தாண்டிய வளர்ச்சி.. - சந்தைக்கு சாதகமா?

ஜெ.சரவணன்

2016-ம் வருடம் தொடங்கிய இரண்டு மாதங்களில் பங்குச் சந்தையின் வளர்ச்சி கிட்டதட்ட 15 சதவிகிதம் குறைந்தது. இது பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சந்தை ஏற்றமடையத் தொடங்கியதும்தான் முதலீட்டாளர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில், நிறுவனங் களின் 2015-16 -ம் நிதி ஆண்டின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பங்குச் சந்தையின் 93 சதவிகித மார்க்கெட் கேப்பிட்டலை சேஷனுக்குப் பங்கு வகிக்கும் பிஎஸ்இ 500-ல் உள்ள 76 நிறுவனங்கள் கணிப்பைத் தாண்டி லாபமடைந்துள்ளன. இந்த 76 நிறுவனங்களில் 49 நிறுவனங்களின் நிகர லாபம் கணிப்பைத் தாண்டி வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கெனவே சந்தை சற்று ஏற்றத்தில் உள்ள நிலையில் கம்பெனிகளின் இந்த கிடுகிடு வளர்ச்சி சந்தைக்குச் சாதகமாக அமையுமா என்று பங்குச் சந்தை நிபுணர் ஷியாம் சேகரிடம் கேட்டோம்.

“காலாண்டு முடிவுகளில் பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் பலவும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது சந்தையைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம்தான். ஆனால், அந்த வளர்ச்சி எதன் காரணமாக நடந்துள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பங்குச் சந்தையின் போக்கை சர்வதேச சந்தைகளும், சர்வதேச அளவிலான முக்கிய நிகழ்வுகளுமே தீர்மானிக்கின்றன.  

கம்பெனிகளின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அல்லாத 156 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் 17 சதவிகித வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த 156 நிறுவனங்களின் மதிப்பீட்டு செயல்பாட்டு லாபத்தின் வளர்ச்சி 2014-15 -ம்  நிதி ஆண்டைக் காட்டிலும் 2015-16 -ம் நிதி ஆண்டில் 7 சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்