பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்:

கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகள், அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. பங்குகள் குறுகிய விலை ஏற்ற இறக்கத்துக்குள்ளே வர்த்தகமாகி வந்தன.

எனவே, வர்த்தகம் மேற்கொள்வது சற்றே கடினமாகத்தான் இருந்தது.

கடந்த இரண்டு வாரங்களில் இண்டெக்ஸ் சார்ட்டில் காணப்படும் டோஜி கேண்டிலை பார்க்கும்போது, எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாத நிலையில் காளை வர்த்தகர்களும், கரடி வர்த்தகர்களும் இருப்பதை காண முடிந்தது.

ஆனால், கடந்த வாரத்தில் சந்தை நிறைவடைந்ததை வைத்து அடுத்த வார சந்தை எப்படி இருக்கும் என்பதற்கு சில அறிகுறிகளை பார்க்க முடிகிறது. கடந்த வார நிஃப்டி கேண்டில் ஸ்டிக் சார்ட்டை பார்க்கும்போது, சந்தை கரடியின் பிடியில் இருப்பதையும், அடுத்த வாரத்திலும் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது போலவே தெரிவதையும் பார்க்க முடிகிறது.

பேங்க் நிஃப்டி, நிஃப்டியோடு இணைந்து இறக்கத்தை சந்தித்தது. பொதுத் துறை வங்கிப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் மந்தநிலையில் இருப்பதோடு, சந்தையும் இறக்கம் கண்டுவந்ததால், தனியார் துறை வங்கிப் பங்குகளின் விலை ஏற்றமும் தடைப்பட்டு மொத்த வங்கி நிஃப்டியும் விலை இறங்கி, தன் வலுவான சப்போர்ட்டான 16200 என்கிற புள்ளிகளை நெருங்கி கடந்த வார வர்த்தகம் நிறைவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்