நிஃப்டி எதிர்பார்ப்புகள்: ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

7980 என்ற லெவலின் மீது கவனம் வையுங்கள் என்றும் செய்திகள், ரிசல்ட்கள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அதிகமான கவனத்துடன் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

செய்திகள் பாசிட்டிவ்வாக வந்தால் திடீர் ஏற்றங்கள் வந்து விடக்கூடும் என்றும் 7980 லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங்குகள் வராதவரை ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சொல்லியிருந்தோம். எனவே, தற்போதைக்கு இந்த லெவலைக்  கண்காணித்துக ்கொண்டே வியாபாரம் செய்து வரவேண்டும் என்றும் வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது என்றும் உஷார்படுத்தி யிருந்தோம்.

வாரத்தில் ஒரு நாள் ஏற்றத்தை யும் நான்கு நாள் இறக்கத்தையும் சந்தை நிஃப்டி சந்தித்து 7678 என்ற  குறைந்தபட்ச லெவலையும், 7890 என்ற அதிகபட்ச லெவலை யும் இன்ட்ராடேயில் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந் திர ரீதியாக 116 புள்ளிகள் இறக்கத் தில் குளோஸானது. இன்ட்ரா டேயில் திடீர் ஏற்றங்களை அவ்வப்போது சந்தித்த நிஃப்டி, 52 முதல் 155 புள்ளிகள் வரையிலான வாலட்டைலிட் டியை கடந்த வாரத்தில் சந்தித்தது.

செய்திகள் பாசிட்டிவ்வாக வராத வரை வாலட்டைலிட்டி தொடரவே வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங் கள். எனவே, நல்ல ஃபண்டமென் டல்கள் கொண்ட ஸ்டாக்குகள் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸு டன் கூடிய சிறிய அளவிலான லாங் சைட் வியாபாரத்துக்கு மட்டுமே சந்தையை டிரேடர்கள் ட்ராக் செய்யலாம்.

ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிர்க்கவேண்டிய கால கட்டம் இது. திடீர் வால்யூ முடன் கூடிய வாலட்டைலிட்டி வந்தால் 7470 லெவல்கள் வரையிலுமே சென்று வேகமாக திரும்பிவிடும் வாய்ப்புகள் இருப்பதால், அனைத்து விதமான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்களும் அதுபோன்ற சூழ் நிலையில் வியாபாரம் செய்வதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதே நல்லது. அதிக கவனத்துடன் வியாபாரம் செய்ய வேண்டிய நேரம் இது என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்