டிரேடர்களே உஷார் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
லாபம்.... வரும்ம்ம்ம்ம்... ஆனா.....? தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

சூரிய வெளிச்சம், ஜன்னல் வழியே சுள் என்று அடித்தது. அப்படியே அந்த வெளிச்சம் படுக்கையில் படுத்திருந்த சம்பத் முகத்திலும் அடித்தது. கண்ணை சுருக்கிகொண்டு, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார். மணி காலை 6.45.

அவருக்கு  உடம்பெல்லாம் அப்படி வலி. காலை மடக்கி நீட்டினார். கை, தோள் பட்டை என்று வலி எல்லா இடத்திலும் பரவி இருந்தது. கட்டிலில் இருந்து எழுந்திருக்க சலிப்பாக இருந்தது. இந்த வலியில் இருந்து எப்போ மீளப் போறோமோ என்று மனசு ஏங்கியது.

‘நேத்து 40100-க்கு வாங்கின ரெண்டு சில்வர் மெகா லாட் இறங்கி 39900-ல் முடிஞ்சு, ரூ.12,000 லாஸ்ல முடிஞ்சது. இன்னக்கி எப்படி ஓப்பன் ஆகுமோ?’

சம்பத், கொஞ்ச நேரம் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ‘ஒருவேளை சில்வர் (வெள்ளி) கேப் டவுனில் துவங்கினால்?’

இப்படி ஒரு எண்ணம் வந்த வுடன், சம்பத்துக்கு சட்டென்று முழிப்பு வந்தது. மணியைப் பார்த்தார்... 7.30.

சம்பத் சுடர்வேலுவுக்கு வயது 42. தனியார் நிறுவனம் ஒன்றில் கடைசியாக இரண்டு வருடம் வேலை பார்த்து, அது சரி வரவில்லை என்று வெளியே வந்துவிட்டார்.  அதற்கு முன்பு சில கம்பெனிகளில் ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று வேலை பார்த்தார். ஒன்று, இவர் வேலையை விடுவார். அல்லது இவரை வேலையில் இருந்து அனுப்பிவிடுவார்கள்.

இனி யாரிடமும் கைகட்டி வேலை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து, முழு நேர கமாடிட்டி  டிரேடிங்கில் இறங்கிவிட்டார். கடந்த ஒரு வாரமாக டிரேடிங் செய்து வருகிறார். ஒரு நாள் லாபம்.... ஒரு நாள் நஷ்டம்... என்று ஓடிக் கொண்டு இருந்தது. அது இன்றும்  தொடர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்