பிசினஸ் சீக்ரெட்ஸ் - 42

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏ.ஆர்.குமார்தவறான ஊழியர்களிடம் கருணை வேண்டாம்!

வின்கேர் சி.கே.ரங்கநாதனுடன் வளர்ந்துவரும் தொழில்முனைவோர்கள் நடத்திய கலந்துரையாடலின் கடைசிப் பகுதி இதோ:

டி.எஸ்.ஸ்ரீநாத், ரேடியன்ஸ் குளோபல் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்: ‘‘கடந்த ஆறு மாதங்களாக ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன். உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்வதுதான் என் நோக்கம். கடந்த ஆறு மாதங்களாக எனக்கு எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை. எக்ஸ்போர்ட் செய்வதற்கு எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள்.’’

சி.கே.ஆர்:
‘‘முதலில்,  பொருட்களை (Commodity) வாங்கி ஏற்றுமதி செய்யப் போகிறீர்களா அல்லது அதை மதிப்பு கூட்டப்பட்ட  பொருட்களாக (Value added goods) மாற்றி விற்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கான  ஸ்ட்ராட்டஜியை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள். நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று கிடைத்ததை எல்லாம் ஏற்றுமதி செய்ய நினைப்பது கூடாது. இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஆராய்ந்து, கடைசியில் ஒரே ஒரு பொருளை தேர்வு செய்து, அதன் மதிப்பைக் கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும்.

மதிப்பு கூட்டி பொருட்களை விற்பதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். என்றாலும், நாம் தயாரிக்கும் பொருள் தரமாக இருந்து, அதை வெளிநாடுகளில் வாங்குவதற்கு சில ஆட்கள் கிடைத்துவிட்டால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே, வெறும் பொருட்களை வாங்கி, ஏற்றுமதி செய்வதை நான் எப்போதும் உற்சாகப்படுத்துவது இல்லை.’’

டி.எஸ்.ஸ்ரீநாத்: மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நான் பிறரிடமிருந்து வாங்கி விற்கலாமா அல்லது நானே தயாரித்து விற்கலாமா?

சி.கே.ஆர்.: ‘‘இரண்டுமே செய்யலாம். என்றாலும் நீண்ட காலத்தில் நீங்களே தயாரித்து விற்பதன் மூலமே தரத்தை நீங்கள் விரும்புகிற அளவுக்கு தொடர்ந்து தரமுடியும். மற்றவர் தயாரித்து விற்கிற பொருளையே நீங்கள் வாங்கி விற்றால், அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் விற்கிற பொருளில் ஏதாவது வித்தியாசம் இருந்தால்தானே உங்கள் பொருளை விரும்பி வாங்குவார்கள். எனவே, நீங்கள் விற்க நினைக்கும் பொருள் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டால் எந்த வகையில் அது வித்தியாச மானது என்பதை முதலில் சொல்லுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இதற்கு ஒரே வழி, நீங்கள் முதலில் களமிறங்கி தீவிரமாக விசாரித்து, ஆராய்வதுதான்.’’

டி.எஸ்.ஸ்ரீநாத்: ‘‘ஒரு பொருளை பிராண்டிங் செய்ய ரூ.10, 15 லட்சம்  செலவாகும் என்கிறார்களே, குறைந்த செலவில் பிராண்டிங் செய்ய முடியாதா?’’

சி.கே.ஆர்: ‘‘நிச்சயம் முடியும். சந்தையில் இறங்கிப் பார்த்தால், குறைந்த செலவில் உங்களுக்கான பிராண்டிங்கை செய்வது  எப்படி என்பதை நீங்களே கண்டுபிடிக்க லாம். வித்தியாசமாக, கிரியேட்டிவ்-ஆக மாற்றி யோசிப்பதன் மூலம்தான் இதற்கான தீர்வுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

உதாரணமாக, டெட்ரா பேக் செய்யும் ஒரு மிஷினின் விலை சுமார் 22 கோடி ரூபாய் ஆகும் என்றார்கள். ஆனால், நாங்களே மாற்றி யோசித்ததன் விளைவாக வெறும் 50, 60 லட்ச ரூபாய்க்குள் அந்த வேலையை செய்யும் மிஷினை தயார் செய்தோம்.  நீங்களும் அந்த மாதிரி யோசித்துப் பாருங்கள். இல்லை, அதிக பணத்தை செலவு செய்துதான்  பிராண்டிங் செய்ய வேண்டும்   எனில், அதை செய்யுங்கள். ஏனெனில், ஒரு பிராண்டை உருவாக்கி பொருளை விற்பதன் மூலமே நல்ல லாபம் பார்க்க முடியும்.’’

பிரபாகர்: ‘‘ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு உள்ள கடமைகள் என்னென்ன?’’

சி.கே.ஆர்.:
‘‘முதலாவது, சரியான ஸ்ட்ராட்டஜிகளை உருவாக்குவது. இவ்வளவு சதவிகித சந்தையைப் பிடிக்க வேண்டுமெனில், அதை எப்படி செய்யப் போகிறோம், போட்டி யாளர்களைவிட அதிக தரத்தில் பொருட்களைத் தருவதன் மூலம் சந்தையைப் பிடிக்கப் போகிறோமா அல்லது விலையைக் கொஞ்சம் குறைத்துத் தருவதன் மூலம் விற்பனையை அதிகரிக்கப் போகிறோமா என்பதில் பக்காவான தெளிவு இருப்பதுதான் ஸ்ட்ராட்டஜி.

இரண்டாவது, ஸ்ட்ரக்சர். நம்முடைய ஸ்ட்ராட்டஜியை சரியாக நிறைவேற்ற வேண்டும் எனில், நம்முடைய ஸ்ட்ரக்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் நமக்கொரு தெளிவு இருக்க வேண்டும். சாதாரணமாக, ஒரு நிறுவனத்தைத் தொடங்கியவுடன்  உற்பத்தியை கவனிக்க ஒரு மேனேஜர், ஃபைனான்ஸை கவனிக்க ஒரு மேனேஜர், சேல்ஸுக்கு ஒரு மேனேஜர்,    ஐ.டி.க்கு ஒரு மேனேஜர் என எடுத்த எடுப்பிலேயே பலரை வேலைக்கு அமர்த்திவிடுவார்கள். ஆனால், அந்த நிறுவனத்தில் ஐ.டி. துறைக்கு தனியாக ஒரு மேனேஜர் தேவைப்படாமலே இருப்பார். ஆனால், ஆர் அண்ட் டிக்கு தனியாக ஒரு மேனேஜர் அவசியம் தேவைப்படுவார்.  ஆக, ஒரு நிறுவனம் ஜெயிப்பதற்கு யாரெல்லாம் மிக அவசியமோ அவர்கள் சரியான அளவில் இருக்கிறார்களா என்பதை பார்ப்பது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்