இழப்பு நம் இந்திய நாட்டுக்குத்தான்!

ஹலோ வாசகர்களே..!

‘‘மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நம் நாட்டுக்கு ஏற்றவரல்ல. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக வட்டி விகிதத்தை அதிகமாக வைத்துவிட்டார். இதனால் நம் நாட்டில் தொழில் நிறுவனங்கள் நசிந்து, வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது’’ என்று விமர்சித்திருக்கிறார் பாரதிய ஜனதா சார்பில் சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி. ஆன சுப்பிரமணியன் சுவாமி.

அரசியல் தலைவர்கள் உள்பட யார் மீது வேண்டுமானாலும் போகிற போக்கில் கருத்து சொல்லிவிட்டுப் போகிற பழக்கம் சுவாமிக்கு நிறையவே உண்டு. தானே ஒரு பொருளாதாரத் துறை பேராசிரியர் என்கிற நிலையிலும், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மீது தேவை இல்லாமல் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் எதுவுமே நியாயமானதல்ல என்பதற்கு பல வாதங்களை முன்வைக்கலாம்.

இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கத்தை 5 சதவிகிதத்துக்குள் தொடர்ந்து வைத்திருப்பதையும் மொத்த பணவீக்க விகிதத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மைனஸிலேயே வைத்திருப்பதையும் ராஜனின் சாதனை என்றே சொல்லலாம். அது மட்டுமல்ல, பேமென்ட் வங்கிகள், சிறிய அளவில் ஃபைனான்ஸ் செய்யும் வங்கிகளை அறிமுகப்படுத்தி, வங்கித் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்