குறையும் இன்ஷூரன்ஸ்... ஏஜென்ட்டுகள் காரணமா?

மு.சா.கெளதமன்

ம் நாட்டில் லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வருவதாக நாம் நினைத்தாலும், கடந்த சில ஆண்டுகளாக  லைஃப் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை  குறைந்துகொண்டே வருவதாக சொல்கிறது இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான   ஐ.ஆர்.டி.ஏ.வின் வலைதளம்.

குறையும் இன்ஷூரன்ஸ்!


இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 2010-11-ம் ஆண்டுக்குப்பிறகு படிப்படியாக புதிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பது குறையத் தொடங்கி இருக்கிறது (பார்க்க, அட்டவணை  - 1). 2010 - 2011-ல் 370 லட்சம் புதிய பாலிசிகளை பெற்ற   எல்.ஐ.சி நிறுவனம் 2014-15-ல்  வெறும் 201.71 லட்சம் பாலிசி களை மட்டுமே பெற்றது.  

அதே போல், தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்க ளுக்கும் 2010 - 11 காலத்தில் 111.14 லட்சம் பாலிசிகளாக இருந்த எண்ணிக்கை கடந்த 2014 - 15-ம் காலத்தில் 57.37 லட்சமாக சரிந்திருக்கிறது. இது மட்டுமின்றி, இன்ஷூரன்ஸ் டென்சிட்டி மற்றும் இன்ஷூரன்ஸ் பெனிட்ரேஷன் போன்ற கணக்கீடுகளும் இந்த சரிவை உறுதிப்படுத்துகின்றன.

சந்தை யாரிடம்?

பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி 2000-ம் ஆண்டிலிருந்து இன்று வரை பெரும்பாலான லைஃப் இன்ஷூரன்ஸ் சந்தையைப் பிடித்திருக்கிறது. 2010-11-ம் ஆண்டில்தான் எல்.ஐ.சி தன் வாழ்நாள் குறைவாக லைஃப் இன்ஷூரன்ஸ் சந்தையில் 70 சதவிகிதத்துக்குக் கீழ் சந்தையை வைத்திருந்தது. அதன்பிறகு மீண்டும் உயர்ந்து 2014-15-ல் 73.05 சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. (பார்க்க அட்டவணை - 2) 

சரிந்த மொத்த பிரீமியம்!

கடந்த 10 ஆண்டுகளில் 2005-2006-ம் ஆண்டுகள் முதல் 2009-10 வரை எல்.ஐ.சி மற்றும் தனியார் துறை லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் சீராக அதிகரித்தபடி இருந்தன. ஆனால், 2010-11-ம் ஆண்டுக்குப் பிறகு எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த பிரீமிய வசூலில் ஒரு சிறிய சுணக்கம் (சுமாராக 1000 கோடி ரூபாய்) ஏற்பட்டபின் மீண்டும், சீராக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியது. (பார்க்க அட்டவணை - 3)

தனியார் துறைக்கு 2010-11-ம் ஆண்டுக்குப்பின் மொத்த பிரீமியம் வசூலில் பெரிய சரிவே ஏற்பட்டு தற்போது 2014-15-ம் ஆண்டில்தான் மீண்டும் 2010-11 -ல் இருந்த நிலையை அடைந்து இருப்பதையும் அட்டவணை 3-ல் பார்க்கலாம்.

2010 - 11-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பாலிசிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்ற போதிலும் பிரீமியத்தின் வசூல் தொகை குறைந்ததாகத் தெரியவில்லை.பணவீக்கம் காரணமாக இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் அதிக தொகைக்கு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் இன்ஷூர் செய்துகொள்வது, அதிக நபர்கள் ஒரு பாலிசியில் கவர் ஆவது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்