கேட்ஜெட்ஸ்

கார்த்தி

கெனான் இஓஎஸ் 1300டி (Canon EOS 1300D)

சில ஆண்டுகளுக்குமுன் வெளியான கெனான் இஒஎஸ் 1200டி, ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அதன் அடுத்த வெர்ஷனான கெனான் இஓஎஸ் 1300டியை அறிமுகப்படுத்தியுள்ளது கெனான் நிறுவனம்.

இந்த மொபைல் யுகத்தில், இந்த கேமராவை, மொபைலுடன் இணைத்து வைப்பது மிகவும் எளிது. அதற்கென பிரத்யேகமாக NFC, WI-FI போன்ற தொழில்நுட்பங்களை இன்-பில்ட்டாக கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல், கெனான் கேமரா கனெக்ட் ஆப்ஸ் மூலமாகவும், புகைப்படங்களை மொபைல்களில் பதிவேற்றம் செய்யலாம். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மொபைல்களில் இந்த ஆப்ஸ் வேலை செய்யும்

பார்ப்பதற்கு கெனான் ஐஓஎஸ் 1200டி போலவே இருக்கிறது, இந்த கேமரா. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டு இருக்கும் இந்த கேமராவின் இடது பக்கத்தில், மினி HDMI போர்ட், மினி - யுஎஸ்பி போர்ட், ஒயர்டு ரிமோட் போன்ற வசதிகளுக்கான போர்ட்டுகள்  கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்