உச்சம் தொடுவதற்கான சூத்திரங்கள்!

சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகத்தின் பெயர்     – ஸ்டார்ம் தி நார்ம் (Storm the Norm)

ஆசிரியர்         – அனிஷா மோட்வானி (Anisha motwani)

பதிப்பாளர்         – ரூபா (Rupa)

ரு காரியத்தை செய்து முடிப்பதற்கு பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்போது `வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்னு சும்மாவா சொன்னாங்க’ என்று சொல்வது நம்முடைய வழக்கம்.

ஆனால், அதைவிட அதிக சிரமங்களையும் சவால்களையும் கொண்டது ஒரு நிறுவனத்தின் பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, நுகர்வோர்களின் மனதில் அதை இடம்பிடிக்க வைத்து ஒரு வெற்றிகரமான பிராண்டாக உருவாக்குவது ஆகும்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் `ஸ்டார்ம் தி நார்ம்’ என்கிற புத்தகத்தில் அனிஷா மோத்வானி வெற்றிகரமான 20 பிராண்டுகளின் உருவாக்கம் பற்றி மிகவும் சுவராஸ்யமான பல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

ஆயிரக்கணக்கான பிராண்டுகள் இருக்கும்போது அவர் எதன் அடிப்படையில் இருபது பிராண்டுகளை  தேர்வு செய்தார் என்கிற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். இந்த பிராண்டு களைத் தேர்ந்தெடுக்க அவர் பன்முக அணுகுமுறை யையும், கடுமையான அளவுகோல் களையும் மேற்கொண்டிருக்கிறார்.  அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமாகவோ, பன்னாட்டு அல்லது உலக அளவில் செயல்படும் நிறுவனமாகவோ இருப்பதோடு, அந்த நிறுவன பிராண்டுகளின் மார்க்கெட் ஷேர், அந்த பிராண்டுக்கு இருக்கும் பிரபலம், நுகர்வோர்களின் நம்பிக்கை, அதன் செயல்பாட்டுத் திறன் போன்ற பல காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்த பிராண்டுகளைத் தேர்வு செய்து இருக்கிறார். அப்படி தேர்வு செய்த  பிராண்டுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்.

முதலாவதாக, பாரம்பரியமான நிறுவன பிராண்டுகள் (பல ஆண்டு காலமாக சந்தையில் இந்த நிறுவனங்களின் பிராண்டுகள் இருந்துவந்தாலும் காலத்துக்கேற்றாற் போல பல புதுமைகளை அறிமுகப் படுத்தி தொடர்ந்து சந்தையின் உச்சியில் இருந்து வரக்கூடியவை!). இரண்டாவதாக, சேலஞ்சர்  பிராண்டுகள் (சந்தையின் உச்சத்தில் இருக்கக்கூடிய பிராண்டுகளுடன் போட்டி போட்டு தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் புதிய பிராண்டுகள்!).

இறுதியாக, தொழில்முனைவோர் பிராண்டுகள் (சிறிய அல்லது பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்கள் தங்களது அசாத்தியமான துணிச்சல் மூலம் மறைந்திருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சந்தையின் உச்சத்தைத் தொட்டவை!)

பாரம்பரியமான நிறுவன பிராண்டுகளாக காட்பரி, கிஸான், எம்டிஆர், ரேமண்ட், சஃபோலா மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், சேலஞ்சர் வகையின் கீழ் டாடா டீ, ஸ்பிரைட், ஆக்ஸிஸ் பேங்க், மஹிந்திரா & மஹிந்திராவின் XUV 500, குர்குரே சிப்ஸ், ஹோண்டா டூ வீலர், சென்ஸோடைன் (பல் சுகாதாரம் சம்பந்தப்பட்டது), ஐடியா மொபைல், ஃபோர்ட் எகோஸ்போர்ட், ஃபியாமா டி வில்ஸ் (குளியல் சோப்), தொழில்முனைவோர் தொழில் சார்ந்த பிராண்டுகளாக பிவிஆர் மல்டிப்ளக்ஸ், மேக் மை ட்ரிப், மிர்ச்சி எஃப்எம், ரியல் ஆக்டிவ் ஜூஸ் என இருபது பிராண்டுகளின் வெற்றி குறித்து இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியலும் சினிமாவும் இரு கண்கள் போன்றது. எனவே, பிவிஆர் சினிமாவின் வெற்றிக்கான காரணம் குறித்துப் பார்க்கலாம். அஜய் பிஜ்லியின் (சேர்மன், நிர்வாக இயக்குநர், பிவிஆர் சினிமா) தாத்தா ஒரு ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வந்தார். அஜய் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் இந்த நிறுவனத்தில் சேரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு அஜய்-ன் அப்பா டெல்லி வசந்த் விஹாரில் இருந்த ப்ரியா சினிமாவை விலைக்கு வாங்க, அது அஜய்யின் தொழில் முனைவோர் ஆகவேண்டு மென்கிற ஆர்வத்துக்கு உத்வேகம் அளித்தது.

தனது திருமணத்துக்குப் பிறகு, 1990-ம் ஆண்டு ஃப்ளோரிடா வுக்குச் சென்றபோது அங்கிருந்த உலகத்தரம் வாய்ந்த திரைப்பட அரங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த `வில்லேஜ் ரோட்ஷோ (Village Roadshow Ltd)’ நிறுவனத்தின் கூட்டுறவில் ஆரம்பமானது பிவிஆரின் சரித்திரம். இன்றைக்கு 43 நகரங்களில் 474 திரை அரங்கு களையும், 6 பெளலிங் மையங் களையும் நிர்வகித்து வருகிறது. இதன் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி.

இதன் வெற்றிக்கான காரணங்கள் என்ன? மக்களின் சமூகப் பொருளாதார நிலைக்கு ஏற்றாற் போல திரையரங்குக் கான  இடத்தைத்  தேர்ந்தெடுப்பது, திரைப்படம் வெளியிடுவது மட்டுமல்லாமல் அதோடு தொடர்புகொண்ட திரைப்பட தயாரிப்பு, வெளிநாட்டுப் படங்களை வாங்கி விநியோகிப் பது, திரைப்பட ரசிகர்களின் பொழுதுபோக்குக்கு திரையரங்குகள் இருக்கும் இடத்திலேயே பெளலிங் விளையாட்டரங்கங்கள் ஆரம்பித்தது, ரசிகர்களின் மாறும் ரசனைக்கேற்ப புதிய தொழில் நுட்பத்தை திரையரங்குகளில் அறிமுகப்படுத்துவது, பார்வையாளர்களின் வசதிக்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்ப டைரக்டர்ஸ் கட், கோல்ட் க்ளாஸ், பிவிஆர் ப்ரீமியர், பிவிஆர் மெயின்ஸ்ட்ரீம் என பல வகையான திரையரங்கங் களை அமைப்பது போன்ற தொடர்ச்சியான செயல்பாடுகள், புதுமைகள் மூலம் பிவிஆர் இன்றைக்கு இந்திய திரைப்படத் துறையின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்