பெர்க்‌ஷயர் பங்குதாரர் கூட்டம்: தன்னையே திரும்பி பார்த்த பஃபெட்!

ஜெ.சரவணன்

வாரன் பஃபெட், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர், முதலீட்டாளர்களின் குரு என்பதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும். சந்தையைப் பற்றியும் முதலீட்டைப் பற்றியும் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் வேத வாக்காகவே எடுத்துக் கொள்ளும் முதலீட்டாளர்கள் உலகம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட முதலீட்டு ஜாம்பவனான பஃபெட் தன்னைத் தானே திரும்பிப் பார்க்கும் நிலையில் உள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

காரணம், வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத் தின் செயல்பாடு சமீப காலமாக அதன் பங்குதாரர்களைத் திருப்திபடுத்தும் வகையில் இல்லை. சில பங்குதாரர்கள் தங்களின் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெர்க்‌ஷயர் ஹாத்வேவின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம், சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் ஒமாஹாவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக எழுப்பப்பட்ட விஷயங்கள், கடந்த பத்து வருடங்களாகக் குறைந்து வரும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் உலக நாடுகளின் நெகட்டிவ் வட்டி விகிதமும்தான்.

“தற்போது நீண்டகால வட்டி விகிதம் 4 முதல் 5 சதவிகிதமாக இருப்பது இனிவரும் காலங்களில் வட்டியானது நிரந்தரமாக 1 அல்லது 2 சதவிகிதமாகவே இருக்கும் நிலைக்குப் போகு மெனில் கம்பெனிகளின் பங்கு விலை அதிரடியாக உயர ஆரம்பித்துவிடும். தற்போது அமெரிக்க சந்தையில் உள்ள பிரச்னையே பல கம்பெனிகளின் பங்குகள் பெரும்பாலும் அதிகபட்ச விலைகளில் வர்த்தகமாவதுதான். இதனால் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

மேலும், இங்கு கடன் வட்டி விகிதம் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதால், ரியல் எஸ்டேட் கேப்பிட்டலைசேஷன் விகிதம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. 1 அல்லது 1.5 அல்லது 2 சதவிகிதங்களில் கிடைக்கும் கடனை வைத்து உங்களால் 8 முதல் 10 சதவிகித வருமானத்தை ஈட்ட முடியும் என்றால் முதலீட்டாளர்கள் அனைவரும் அத்தகைய மனநிலைக்குத்தான் போவார்கள்” என்றார் பஃபெட்.

“இந்த நெகட்டிவ் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு நீடித்தால், ரிஸ்க் உள்ள பங்குகள் மிக அதிக விலையில் வர்த்தக மாகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று பஃபெட் சொன்னார். 

ஆனால், பஃபெட் நினைத்தால், ஏஏஏ தரம் கொண்ட அவர் நிறுவனத்தின் மூலம் அவரால் 1 - 2 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியும். அப்படி வாங்கி ஏன் 7 முதல் 8 சதவிகிதத்துக்கு ஆர்பிட்ரேஜ் செய்யக்கூடாது என்று சிலர் கேட்டனர். பஃபெட் தனது முதலீடுகளை சோலார் நிறுவனங்களில் செய்து 10 முதல் 11 சதவிகித வருமானத்தை வரிச் சலுகையோடு ஈட்டி வருகிறார் என்பது முக்கியமான விஷயம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்