திருச்சியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பு!

‘‘இனி எங்கள் முடிவுகளை நாங்களே எடுப்போம்!’’மு.சா.கெளதமன்

டந்த மே 7, 8 ஆகிய தேதிகளில், திருச்சியில் நாணயம் விகடனின், இரண்டு நாள் முழுமையான பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர்.

எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளித்தார்.

நான் யார்..?


பல டிரேடர்கள், தாங்கள் சுவிங் டிரேடரா, டே டிரேடரா என்பதே தெரியாமல் தவறான முடிவுகளை எடுத்து ஷேர் டிரேடிங்கில் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். வகுப்பின் ஆரம்பத்திலேயே பயிற்சியில் பங்கேற்றவர்களை தாங்கள் எந்த வகையான டிரேடர் என்பதை அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில், அவர்களின் வாயாலேயே சொல்ல வைத்தார் தி.ரா.அருள்ராஜன்.

ஒரு வர்த்தகத்துக்கான ரிஸ்க்!

ஒரு டிரேடருக்கு தான் எவ்வளவு லாபத்தில் அல்லது நஷ்டத்தில் வெளிவர வேண்டும் என்கிற தெளிவு கட்டாயம் இருக்க வேண்டும். ஆக, ரிஸ்க் கேப்பிட்டல் எவ்வளவு, அதில் ஒரு டிரேடுக்கு எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும், ஒரு டிரேடுக்கு எடுக்கும் ரிஸ்க் அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சில பல டிப்ஸ் களையும் கொடுத்து விளக்கினார்.

டிரேடர்களுக்கான தங்க விதிகள்!

பங்குச் சந்தையில் எவ்வளவு படித்தாலும் இந்த 4 விதிகளில் அடங்கிவிடும் என்று பக்கா பார்முலாவை சொல்லித் தந்தார். அந்த நான்கு விதிகளையும் புரிந்துகொண்ட டிரேடர்கள், பிரமாதம் என்று புகழ்ந்தார்கள்.

கூலான கேண்டில் ஸ்டிக்!

பல டிரேடர்களுக்கும் சந்தையின் நகர்வை பக்காவாகக் காட்டும் ஒரு நல்ல சார்ட் பேட்டன் கேண்டில் ஸ்டிக். அதில் உள்ள பல வகையான கேண்டில்களையும், கேண்டில் களால் உருவாகும் பேட்டன் களையும், வரைபடங்களுடன் விளக்கினார் பயிற்சியாளர்.

“இந்த பியரிஷ் என்கல்ஃபிங் வந்தா, அடுத்து இறங்கும். இதை பியரிஷ் என்கல்ஃபிங்-ன்னு சொல்றதவிட ஈவினிங் ஸ்டார்-ன்னு எடுத்துக்கலாம். ஸோ, கண்டிப்பா பங்கின் விலை இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது” என்று பயிற்சி எடுத்தவர்கள் சொன்னபோது, பயிற்சி வகுப்பின் மூலம் பெற்ற பலனை அரங்கிலேயே பார்க்க முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்