மொரீஷியஸ் முதலீட்டுக்கு வரி... சந்தை இனி சரியுமா?

மு.சா.கெளதமன்

டந்த வாரத்தில் சந்தையின் ஏற்ற இறக்கமான வர்த்தகத்துக்கு மொரீஷியஸ் வருமான வரி ஒப்பந்தம் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் என்ன சொல்கிறது, இதனால் நம் பங்குச் சந்தைகள் சரியுமா, அந்நிய முதலீட்டாளர்கள் இந்த திடீர் வரி மாற்றத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

மொரீஷியஸ் ஒப்பந்தம்!


1982-ம் ஆண்டு நம் நாட்டுக்கு அதிக முதலீட்டை வரவழைப்பதற் காக, நம் அரசாங்கம் மொரீஷியஸ் நாட்டுடன் ஒரு வருமான வரி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, “மொரீஷியஸிலிருந்து முதலீடு செய்யப்படும் முதலீடுகளுக்கும், அந்த முதலீடுகளினால் கிடைக்கும் வருமானத்துக்கும்  (மூலதன ஆதாயம்) மொரீஷியஸில் மட்டுமே வரி விதிக்கப்படும். இந்தியாவில் எந்தவொரு மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படாது. அதே போல், இந்தியாவில் இருந்து மொரீஷியஸில் செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்தியாவில் மட்டுமே வரி விதிக்கப்படும்’’ என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

இந்த வருமான வரி ஒப்பந்தம் 1982-க்குப் பிறகு சில முறை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மே 10, 2016-ல் மேற்கொள்ளப் பட்ட இந்தியா - மொரீஷியஸ்  வரி ஒப்பந்த மாற்றம் குறித்த முழுமையான விவரங்கள் அரசால் வெளியிடப் படவில்லை. மாற்றம் குறித்து அரசு பத்திரிகை யாளர்களுக்கு மட்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக் கிறது. முழுமையான விவரங்கள் வராத போதும் இந்த செய்தியை காரணமாக வைத்து சந்தையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வந்து குவிந்த முதலீடுகள்!

இந்த ஒப்பந்தத்துக்குப்பின் 2000 - 2015 காலத்தில், இந்தியாவுக்கு வரும் மொத்த முதலீடுகளில் 33% மொரீஷியஸி லிருந்தும்,15% சிங்கப்பூரி லிருந்தும்தான் வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்