பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் நிஃப்டி புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக நாட்களில் நான்கு நாட்கள் சந்தை உயர்ந்தே முடிந்திருந்தாலும், கேப் அப்  (Gap up) தொடக்கம் மற்றும் ஏற்ற இறக்கங்கள் வர்த்தகர்களை திக்குமுக்காட வைத்தது. 

கடந்த வாரத்தில் சந்தை இரண்டு முறை நல்ல ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்து இருந்தபோது, மேக்ரோ டேட்டா விவரங்கள், பி நோட் விவகாரம் போன்ற செய்திகள் காரணமாக சந்தை அதன் வேகத்தை இழந்ததை பார்க்க முடிந்தது.

நிஃப்டியின் வார சார்ட்டைப் பார்த்து ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, அடுத்த வாரம் சந்தை ஏற்றம் அல்லது இறக்கம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 

டிரேடர்கள் பலரும் நிஃப்டி அதன் வலுவான ரெசிஸ்டன்ஸான 8000 புள்ளிகளை உடைத்தால் நல்ல ஏற்றம் காணுமென்று எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். ஆனால், ஆப்ஷன் பொசிஷன்களில் 8000 கால் ஸ்டிரைக் இருப்பதைப் பார்த்தால் ஏற்றம் என்பது கடினம் என்ற நிலையே தெரிகிறது. இந்த 8000 புள்ளிகளை உடைக்க, உடனடியாக பாசிட்டிவ் செய்தி ஏதாவது வந்தாக வேண்டும். எனவே, சந்தையின் போக்கை தீர்மானிக்கும் செய்திகளைக் கவனித்து வர்த்தகம் மேற்கொள்ளவும்.

நிஃப்டி 7750 முதல் 7950, பேங்க் நிஃப்டி 16500 முதல் 17000 என்கிற  புள்ளிகளுக்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்த ரேஞ்சுகள் பிரேக் அவுட் ஆகவில்லை எனில், டிரெண்டைப் பார்த்து வர்த்தகம் மேற்கொள் வது கடினமே. எனவே, இந்தப் புள்ளிகளுக்குள்ளேயே வர்த்தகம் மேற்கொள்வது நல்லது. டிரெண்ட்டுக்கு எதிராக (Fading Trade) வர்த்தகம் மேற்கொள்ள வேண்டாம்.

ஏஷியன் பெயின்ட்ஸ்  (ASIANPAINT)

தற்போதைய விலை : ரூ.943.65

வாங்கவும்


கடந்த 52 வார காலமாக இந்தப் பங்கு நிலை பெற்று வர்த்தகமானது. கடந்த வாரத்தில் இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவு வெளிவந்தது.  இந்த காலாண்டில் விற்பனை அதிகரித்திருப்பதால், இதன் மதிப்பீடு கூடுதலாக இருந்தபோதும் டிரேடர்கள் இதில் வர்த்தகம் மேற்கொண்டு லாபம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, இந்த நிறுவனப் பங்கின் விலை அடுத்த சில வாரங்களில் ரூ.1020 வரை அதிகரித்து வர்த்தகமாகும்.  இந்தப் பங்கை அதன் தற்போதைய விலை அல்லது இறக்கத்தில் ரூ.905 வரை வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.895-யை வைத்து வர்த்தகம் மேற்கொள்ளவும். 

நந்தன் டெனிம் லிமிடெட்  (NDL)

தற்போதைய  விலை : ரூ.155.60

வாங்கவும்


இது டெக்ஸ்டைல் துறை சார்ந்த மிட் கேப் நிறுவனம். இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த பல மாதங்களாக கரெக்‌ஷனில் இருந்தது. தற்போது கரெக்‌ஷன் முடிந்து இதன் விலை வலுவான டிரெண்ட்லைன் ரெசிஸ்டன்ஸை உடைத்து வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்கின் விலை ஏறும் வேகத்தை பார்த்தால், அடுத்த சில வாரங்களில் ரூ.185 வரை உயரலாம். தற்போதைய சந்தை விலையில் வாங்கலாம். ரூ.140 ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்