நிஃப்டி எதிர்பார்ப்புகள்: நெகட்டிவ் செய்திகள் தொடர்ந்தால் வேகமான இறக்கம் வந்துவிடக்கூடும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ற்ற இறக்கங்கள் அதிகரிக்கலாம் என்றும் செய்திகள் பாசிட்டிவ்வாக வராத வரை வாலட்டைலிட்டி தொடரவே வாய்ப்புள்ளது; திடீர் வால்யூமுடன் கூடிய வாலட்டைலிட்டி வந்தால் 7470 லெவல்கள் வரையிலுமே சென்று வேகமாக திரும்பிவிடும் வாய்ப்புள்ளது;

அதனால் அனைத்து விதமான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்களும் அதுபோன்ற சூழ்நிலையில் வியாபாரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று நாட்கள் ஏற்றத்துடனும், இரண்டு நாட்கள் இறக்கத்துடனும் முடிவடைந்த நிஃப்டி, 7753 என்ற குறைந்தபட்சத்தையும், 7961 என்ற அதிகபட்சத்தையும் அடைந்து வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 81.45 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

செய்திகள் பாசிட்டிவ்வாக வராதவரை ஏற்றம் தொடர்ந்து வர வாய்ப்பேயில்லை என்று சொல்லுமளவுக்கே நிலைமை இருக்கிறது. டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லை என்ற நிலைமை யிலேயே சந்தை இருக்கிறது.

நெகட்டிவ்வான ஃபண்டமென்டல் செய்திகளும், நிகழ்வுகளும் திடீர் இறக்கங்களை கொண்டுவந்துவிட வாய்ப்பு இருப்பதால் புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக வரும் வாரத்தில் தவிர்ப்பதே நல்லது.

டெக்னிக்கலாக ரிஸ்க் ரிவார்ட் என்பது 1:1 என்ற நிலைமையிலேயே நிப்டி இருக்கிறது. செய்திகள் நெகட்டிவ்வாக வரும் பட்சத்தில் வேகமான இறக்கங்கள் வந்துவிடக்கூடும் என்பதே டெக்னிக்கல் நிலைமை. 

எனவே, ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகள் வேகமான இறக்கத்தை சந்திக்கும்போது ஒரு சிறிய டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து லாங் சைட் வியாபாரத்துக்காக சந்தையை ட்ராக் செய்யலாம்.

வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் மற்றும் ஓவர் நைட் வியாபாரத்தை மொத்தமாக தவிர்க்கவேண்டிய நேரம் இது. அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்