டிரேடர்களே உஷார் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வரவு எட்டணா... செலவு பத்தணா!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ம்பத் சுடர்வேல் கமாடிட்டி வியாபாரத்தில் ரூ.27,000 நஷ்டம் கண்டிருந்தார். பிற்பாடு மீண்டும் வாங்கி விற்றதில் நஷ்டத்தைக் குறைத்து, லாபம் சம்பாதித்தார். அவர் கண்டிருந்த நஷ்டம் எல்லாம் போக ரூ.11,000 லாபத்தில் இருந்தார்.

சம்பத், தான் பண்ணிய டிரேடை நினைத்துப் பார்த்தார். நினைக்கவே அவருக்கு பெருமையாக இருந்தது. உள்ளுக்குள் உற்சாகம் பீறிட்டது. டிரேடிங் ஸ்கிரீனைப் பார்த்தார். மனதுக்குள் ஒரு கேள்வி வந்தது,

வாட் நெக்ஸ்ட்?


கண்கள் மீண்டும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், சில்வர் மெகா விலையைத் தேடியது. முன்பு வாங்கி விற்ற விலை அவர் மனதில் ஓடியது. வாங்கிய விலை 36,600. விற்ற விலை 36,800.

சம்பத்துக்கு இந்த  36,600-ல் வந்து சப்போர்ட் எடுத்து 36,800-க்கு சில்வர் நகருவது பிடித்து இருந்தது. மீண்டும் எப்போது 36,600 வரும் என்று காத்திருந்தார். ஸ்கிரீனில் விலை மின்னி மறைந்து  கொண்டிருந்தது.

சில்வர் மெகா விலை  36,760... 36,780 என்று நகர்ந்துகொண்டு இருந்தது. அடுத்து வேகமாக 36,800-ஐ தொட்டு, டக்கென்று 36,780-க்கு வந்தது. சம்பத் , மூளையில் ஒரு மின்னல்... ‘அட, காளைகள் விலையை ஏத்த முயற்சி பண்றாங்க!’. மீண்டும் 36,800-ஐ தொட்டது. பின் அதையும் தாண்டி 36,810-க்கு மாறியது.

சம்பத், உள்ளுக்குள் ஊர்ஜிதப் படுத்திக்கொண்டார். ‘நாம் நினைத்தது சரிதான். காளைகள் களத்தில் இறங்கினால், விலையை ஒரு தூக்கு தூக்குவார்கள்!’. சம்பத் மனத்துக்குள் ஒரு சபாஷ் போட்டுக் கொண்டார்.

விலை 36,810-ல் சிறிது நேரம் இருந்தது. பின் நகர்ந்து 36,820-க்கு போனது. சம்பத் உஷார் ஆனார். விலை  36,830... 36,840 என்று எகிற ஆரம்பித்தது. சம்பத்து பாய்ந்து சென்று நாலு மெகா லாட் வாங்கினார். வாங்கிய விலை 36,850.

சரேலென்று அவர் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தார்.  விலை 36,850-ல் இருந்து மேலே ஏற ஆரம்பித்தது. விலை 36,860... 36,870...  விலை நகர்வில் வேகம் பிடித்தது... 36,890...  36,910... சம்பத்துக்கு மகிழ்ச்சி பிடிபட வில்லை. மனதில் ஒரு கணக்கு ஓடியது. ஒரு லாட்டுக்கு 60 பைசா லாபம். அப்படின்னா ரூ.1,800 லாபம். அப்ப நாலு லாட்டுக்கு ரூ.7,200 லாபம்.

மனசு ஹ.. ஹ... என்றது.  மீண்டும் ஸ்கிரீனில் பார்வையை திருப்பினார். விலை 36,910... 36,900... 36,890... கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. சம்பத், தன் முகவாய் கட்டையை அழுத்தி தேய்க்க ஆரம்பித்தார்.

விலை 36,880... 36,870...  பின் சற்றே தயங்கி நின்று 36,840-க்கு சட்டென்று விழுந்தது.

சம்பத்துக்கு தூக்கி வாரி போட்டது. ‘அட, வாங்கின விலையை விட பத்து பைசா இறங்கிப் போச்சே! என்ன பண்ணலாம்?’ அவர் யோசிக்கும்போது, விலை 36,820... 36800... ‘ஐய்யய்யோ விலை இறங்குதே. விலை 36790... 36780... சம்பத்துக்கு உடல் எல்லாம் பதட்டம் தொற்றிக்கொண்டது. வித்திடு... வித்துடு...’

தற்போதைய விலை 36,780. சம்பத் விற்பதற்காக 36,780 என்ற விலையைப் போட்டார். விலை 36,770-க்கு மாறியது. சம்பத் விற்கும் விலையை 36,770-க்கு மாற்றி போட்டார். விலை 36,760-க்கு மாறியது. 36,760-க்கு மாற்றி போட்டார். விலை 36,740-க்கு இறங்கியது. ‘விலை இறங்கிட்டே போகுதே! வந்த விலைக்கு வித்திடு...’ மனசு கூவியது. விலை 36,720... சட்டென்று விற்க 36,700-க்குத்தான் அவரால் விற்க முடிந்தது.

வாங்கின விலை 36,850; விற்ற விலை 36,700. ஒரு லாட்டுக்கு ரூ.4,500 நஷ்டம்.  நாலு லாட்டுக்கு ரூ.18,000 நஷ்டம்.

நேற்று உற்சாக மூடில் இருந்த சம்பத்துக்கு இன்று மீண்டும் உடலெல்லாம் வலித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு இருந்த அத்தனை சந்தோஷமும் இறங்கிப்போனது. உடல் மிகவும் அசதியாக இருந்தது. நாற்காலியில் அமர்ந்து சில விநாடிகள் கண்ணை மூடினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்