தமிழகத்தின் வளர்ச்சி ஜெயலலிதாவின் கையில்!

ஹலோ வாசகர்களே..!

மிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக இருக்கிறார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்குப்பிறகு தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராகும் பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.   

இந்தப் பெருமையை அளித்த தமிழக மக்கள் ஜெயலலிதாவிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள். கடந்த முறை 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதல்வரானபோது, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை முன்வைக்கும் ‘விஷன் 2025’ என்கிற திட்டத்தை வெளியிட்டார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டை அதிகரிக்கவும், மின் உற்பத்தி, துறைமுக வளர்ச்சியை அதிகரித்து, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் திட்டத்தை அப்போது நடந்த இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (CII) கூட்டத்தில் முன்வைத்தார் அவர். 

தமிழகத்தின் வளர்ச்சியை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை பல்வேறு காரணங்களால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனது துரதிருஷ்டமே. அந்தக் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற மீண்டும் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தந்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்ட திட்டத்தை வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அவரால் பன்மடங்கு பெருக்க முடியும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகி, மக்களின் வருமானம் உயர்ந்து, நுகர்வும், சேமிப்பும் உயர்ந்து, 2025-க்குள் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மிளிரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்