​​மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: குரோத் ஆப்ஷன் ஏன் நல்லது?

பா.பத்மநாபன், இயக்குநர், ஃபார்ச்சூன் பிளானர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (பி) லிட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்த ஃபண்ட்-ஐ தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு தேர்ந்தெடுத்தபின், அதில் எந்த ஆப்ஷனை  தேர்வு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. உதாரணமாக, எந்த கம்பெனி கார் என்று முடிவெடுத்தவுடன் எந்த கலர் என்று குழம்புவதைப் போல!   

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானத்தைப் பொறுத்தவரையில், டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு சாய்ஸ் உண்டு.

1. டிவிடெண்ட் என்பது பொதுவாக முதலீட்டாளர்களை மீண்டும் முதலீடு செய்ய வைப்பதற்கு கையாளும் ஒரு வகையான உத்தி.       

2. டிவிடெண்ட் எப்போது, எவ்வளவு சதவிகிதம் கொடுப்பது என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பொறுத்தது. மேலும், டிவிடெண்ட் என்பது நம்முடைய யூனிட்டை விற்று நமக்கு பணமாக கொடுப்பது.

3. பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வழங்கி வருகின்றன. அதே சமயம், சந்தையின் போக்கு ஒரே மாதிரி இருக்காது. இதனால் முதலீட்டாளருக்கு பலன் குறைவு.

4. நாம் எதிர்பார்க்காத சமயத்தில் நமக்கு பணம் வந்தால் தேவையற்ற செலவு வரும். அப்போது எது கண்ணில் படுகிறதோ, அதற்கு செலவு செய்துவிடுவோம்.

5. பலரும் டிவிடெண்ட் என்பது ஏதோ லாட்டரியில் பரிசு விழுந்தது அல்லது ஓசியில் கிடைத்த ஒன்று என்ற எண்ணத்தில் மதிப்பு தெரியாமல் செலவிடுகிறார்கள். இதை சரியாகப் புரிந்துகொள்வதற்கு இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை உதாரணமாக எடுத்துச் சொல்கிறேன். இந்த இரண்டு ஃபண்டுகளை பரிந்துரை செய்வதற்காக சொல்லவில்லை. அதன் செயல்பாட்டை எடுத்துச் சொல்லவே சொல்கிறேன். 1995-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் குரோத் ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவருக்கு இந்த 20 வருடத்தில் அந்த ஃபண்ட் மூலம் ரூ.10,90,000 டிவிடெண்ட் வழங்கப்பட்டிருக்கும். மேலும், அந்த ஃபண்டின் இப்போதைய மதிப்பு ரூ.5,52,883. இந்த ரூ.10,90,000-ஆனது கடந்த 20 வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட  முறை டிவிடெண்ட்-ஆக தரப்பட்டது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்