ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க்கான முதலீடா?

சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், www.wmsplanners.com

‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சந்தை ரிஸ்க்கை பொறுத்தது’ (Investment in the Mutual Fund is subject matter of market Risk) என்கிற எச்சரிக்கை வார்த்தைதான் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை வேகமாக வளராமல் போனதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மாறுபட்ட வருமானத்தை கொடுக்கும் அல்லது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்கிற மாதிரி வாசகங்கள் இடம்பெற்றி ருந்தால் அதில் முதலீடு செய்பவர்கள் அதிகம் பயப்பட மாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களை இப்படி எச்சரிக்கை செய்வதைவிட அவர்களுக்கு பங்குச் சந்தை முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது செபி அமைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஆம்ஃபி போன்ற அமைப்புகள் இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் 45-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மை உடையது.

உதாரணமாக, செக்டார் ஃபண்ட், டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட், டெப்ட் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் என பல வகைகள் உள்ளன. இந்த ஃபண்டுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வருமானம்  தரக்கூடியவை என்றாலும் இவற்றில் உள்ள ரிஸ்க்குகளை பற்றி மட்டும் பார்ப்போம்.

ரிஸ்க்கும் ரிஸ்க்கைத் தாண்டிய வருமானமும்..!

மியூச்சுவல் ஃபண்டில் எந்தத் திட்டமும் ஃபிக்ஸட் டெபாசிட் போல், நிலையான வருவாய் தரக்கூடியவை அல்ல. அதுவும் பங்குச் சந்தை  சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் (ஈக்விட்டி ஃபண்டுகள்) வருமானம் அதிக மாற்றத்துக்கு உட்பட்டவை. மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம், சந்தை ரிஸ்க் மட்டுமின்றி,  மைக்ரோ, மேக்ரோ, குளோபல் ரிஸ்க்குகள், அரசியல் மாற்றங்கள், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை என பல காரணிகளைக் கொண்டு அதற்கேற்ப மாறுபடுகின்றன.

இப்படி பல தரப்பட்ட ரிஸ்க்குகள் இருந்தாலும் கடந்த 20 வருடங்களில் பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 20% முதல் 25% வரை வருமானம் கொடுத்துள்ளன. கடந்த 20 வருடங்களில் பல ரிஸ்க்குகளை இந்த ஃபண்டுகள் சந்தித்துள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது, அமெரிக்காவில் மிகப் பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலானது, ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை மோசடி, கடந்த காலத்தில் இந்தியாவில் நிலவிய நிலையற்ற ஆட்சி, கிரீக் சிக்கல், தற்போது நிலவும் சீனாவின் பொருளாதார மந்தநிலை இப்படி பல தரப்பட்ட விஷயங்களால் பங்குச் சந்தை பாதிக்கப்பட்டாலும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பல நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20 சதவிகிதத்துக்கும் மேல் வருமானம் கொடுத்திருக்கின்றன.

ரிஸ்க்கைத் தாண்டி வருமானம் பெறுவது எப்படி?

விமானத்தில் பறப்பதென்பது தட்பவெட்ப நிலை ரிஸ்க்-ஐ பொறுத்தது (Flying in the Aeroplane is subject matter of Weather Risk) என்ற வாசகத்தை விமானத்தில் எழுதியிருந்தால், அதில் யாரும் பயணிக்க மாட்டார்கள். தினமும் சாலை விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன், நடைபாதையில் நடப்பவர்களைக் கூட லாரிகள் விடுவதில்லை. எனவே, மனிதன் ரிஸ்க்குகளுக்கு மத்தியில்தான் வாழ்கிறான் என்பதை புரிந்துகொண்டால், முதலீட்டு ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பது புரியும். 
விமானத்தில் ஆபத்துக் காலத்தில் சீட் பெல்ட், பாராசூட் போன்றவற்றை பயன்படுத்தி எளிதில் உயிர் தப்பிக்க முடியும். அது மாதிரி மியூச்சுவல் ஃபண்டில் பல விதமான ரிஸ்க்குகளையும் தாண்டி கூடுதல் வருமானம் பெற அல்லது நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.

1. மியூச்சுவல் ஃபண்ட் துறை என்பது நர்சரி தோட்டம் போல. அங்கு பலவிதமான செடி, விதை, மரக்கன்றுகள் கிடைக்கும். நாம்தான் நமக்குத் தேவையானதைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். முதலீட்டு நோக்கம் என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

2. பங்குச் சந்தை முதலீட்டு அடிப்படை விதி, பங்கு விலை குறையும்போது வாங்க வேண்டும். அதிகரித்து லாபத்தில் இருக்கும்போது விற்க வேண்டும் என்பதுதான். ஆனால், பலருக்கும் பங்குச் சந்தையின் பின்னால் செல்ல நேரமிருக்காது. இதனால் அதிக விலைக்கு வாங்கி, நஷ்டம் தாங்க முடியாமல் குறைந்த விலைக்கு விற்பார்கள். இதனைத் தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP - systematic Investment Plan) முறையைத்  தேர்ந்தெடுத்தால், ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீட்டில் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி அதிக யூனிட்கள் (Rupee cost averge benefit) கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்