பத்திரத்தில் தவறு... திருத்துவது எப்படி?

கேள்வி - பதில்

? நான் ஒருவரிடம்  நிலம் வாங்கினேன்.  அவர் பாதி நிலத்தை வைத்துக் கொண்டு பாதியை எங்களுக்கு விற்பனை செய்தார். ஆனால், அவர் எங்களுக்கு கொடுத்த நில அமைப்பை பத்திரத்தில் தவறாக எழுதிவிட்டார். இதனால் அளவு சரியாக இருந்தும் அமைப்பு மாறிவிட்டது. இப்போது அந்த அமைப்பை மாற்றி எழுத  என்ன செய்ய வேண்டும்?

@ சத்யசீலன்,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“ஒருவரது நிலத்தின் பகுதியை வாங்கும்போதும், உங்கள் கிரயப் பத்திரத்துக்கான  சொத்து விவரத்தை குறிப்பிடும்போதும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதில் சொத்து விவரத்தினை இரண்டு ஷெட்யுலாக குறிப்பிட்டு ‘அ’ சொத்து விவரத்தில்  முழுச் சொத்தையும் தெரிவித்து, அதில் நீங்கள் வாங்கும் பகுதி சொத்தினை ‘ஆ’ சொத்து விவரமாக தெளிவாக குறிப்பிடுதல் முக்கியம். ‘ஆ’ சொத்து விவரத்தின்  நான்கு எல்லைகள் தான்  உங்களுக்கு கிரயமாகும் சொத்தினை அடையாளம் காட்டும். 

நில அமைப்பு தவறாகிவிடும் பட்சத்தில், அதனை சரி செய்ய  இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது, உங்கள் பத்திரத்தில் உள்ள தவறைக் குறிப்பிட்டு, அதனை சரியாக திருத்தக்கூடிய பிழை திருத்தல் பத்திரம் (Rectification Deed) எழுதிக் கொள்ளலாம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்