கேட்ஜெட்ஸ்

கார்த்தி

லெனோவோ யோகா டேப் 3 ப்ரோ (lenovo Yoga Tab 3 Pro)

மொபைல்கள் தங்களது அளவை 4 இன்ச்-லிருந்து 5, 5.5, 6 என பெரிதாக்கிக் கொண்டே இருக்கும் சீசன் இது. அதனால் டேப்லெட்டுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதையும் கடந்து டேப்லெட் வாங்குபவர்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சென்று விடுகிறார்கள். ஆண்ட்ராய்டு மென்பொருள் பொருத்தப்பட்ட டேப்லெட்டுகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, புது வசதிகளைப் புகுத்த நிறுவனங்கள் தயங்குவதில்லை.

லெனோவோ நிறுவனம் யோகா டேப் 3 ப்ரோ என்ற மாடலை சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்டெல்லின் ஆட்டம் கோட் கோர் Atom Quad Core 2.24 GHz பிராசஸர், 2 ஜிபி ரேம், 16ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 5 மெகா பிக்ஸல் ஃபிரன்ட் கேமரா போன்ற ஸ்பெசிஃபிகேஷனில் இந்த டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது லெனோவோ.

ஆண்ட்ராய்டு 5.1 மென் பொருளில், இந்த டேப்லெட் இயங்குகிறது. கூடுதல் மெமரிக்கு, மெமரி கார்டு ஸ்லாட் தரப்பட்டு இருக்கிறது.

அதன் மூலம், 128 ஜிபி வரை மெமரி கார்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என உறுதியளிக்கிறது லெனோவோ. இதன் எடை 665 கிராம் என்பதால், இதை எளிதாக உடன் எடுத்துச்செல்லலாம்.

இதில் ஒரு புரொஜெக்டர் இன்-பில்ட்டாக வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், சிறு ஸ்டாண்ட் ஒன்றும் இதனுடன் வருவதால், அதன் 10.1 இன்ச் ஸ்கிரீனில் டேபை சாய்த்து வைத்து படம் பார்க்கலாம். 4 ஜேபிஎல் ஸ்பீக்கரில், டால்பி அட்மாஸ் ஒலிநுட்பத்துடன் உங்கள் வீட்டை ஒரு சிறு ஹோம் தியேட்டராக இதன் மூலம் மாற்றலாம்.

படம் பார்க்க இந்த டேப்லெட் அட்டகாசமாக இருந்தாலும், கேம்-பிரியர்களுக்கு இந்த டேப் உகந்ததில்லை. முழுமையாக சார்ஜ் செய்தால், இதில் இருக்கும் 10200 mAh பேட்டரி 18 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்கிறது லெனோவோ.

ரூ.39,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் இந்த டேப்லெட் விரைவில் சந்தைக்கு  வர இருக்கிறது. விலையை சற்றுக் குறைத்தால், இந்த டேப்லெட் நிச்சயம் பலரைக் கவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்