நிறைய வருமானம்... சரியான முதலீடு!

ஃபைனான்ஷியல் பிளான்கா.முத்துசூரியா

லருக்கு முதலீடு பற்றிய தெளிவும், ஆர்வமும் இருக்கும். ஆனால் முதலீடு செய்ய பணத்தை சம்பாதிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் இருப்பார்கள். பலர் நிறைய சம்பாதிப்பார்கள். வருமானம் வந்து கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.

ஆனால், வரும் பணத்தை எப்படி முறையாக முதலீடு செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருப்பார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விஜயராஜ் எந்த வகையைச் சேர்ந்தவர் என ஆராய்வதை விட்டுவிட்டு, அவர் எப்படி தன்னை மேம்படுத்திக் கொண்டார், இன்னும் எப்படி தன் முதலீட்டு பாதையை வகுத்துக்கொள்ள விரும்புகிறார் எனப் பார்ப்போம். விஜயராஜ் என்ன சொல்கிறார் கேட்போம்...

‘‘எனக்கு 31 வயது. டிப்ளமோ படித்துவிட்டு மின் வாரியத்தில் பணிபுரிகிறேன். சமீபத்தில்தான் பணியில் சேர்ந்தேன். என் மனைவி ஆர்த்தி ஆசிரியையாக உள்ளார். எங்கள் மகன் விதேஷ் நித்தின். நான்கு வயது ஆகிறது. இந்த வருடம் யூகேஜி போகிறான். மகள் நிகிதாவுக்கு ஒன்றரை வயது.எங்களுக்கு இரண்டு வருமானம் வருவதால் பணப் பிரச்னை எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல, விவசாய நிலம் 14 ஏக்கர் உள்ளது. விவசாயத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்கிறேன். செலவு போக வருமானம் மட்டும் ஆண்டுக்கு 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருகிறது. விவசாயத்தில் எனக்கு ஆர்வம் அதிகம்; இன்னும் கூடுதலாக 10 ஏக்கர் நிலம் வாங்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் அதற்கு ரூ.9 லட்சம் தேவை. 

என் ஓய்வுக் காலத்தில் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு இன்றைய மதிப்புப்படியே ரூ.1 கோடி தேவைப்படலாம். என் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.40,000 தேவையாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்