கம்பெனி ஸ்கேன்: இந்திரப்ரஸ்தா கேஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: IGL)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி கேஸ்தனை விநியோகம் செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமான இந்திரப்ரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம்.

பைப்டு நேச்சுரல் கேஸ் (பிஎன்ஜி) மற்றும் கம்ப்ரெஸ்டு நேச்சுரல் கேஸ் (சிஎன்ஜி) என்ற இரண்டுவகை எரிவாயுக்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ரகத்தைச் சேர்ந்தவை. 1988-ம் ஆண்டு கெயில் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் டெல்லி அரசான  நேஷனல் கேப்பிட்டல் ரீஜன் கூட்டணியில் ஆரம்பிக்கப் பட்டது இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம்.

1999-ம் ஆண்டு 9 சிஎன்ஜி பங்குகள் (ஸ்டேஷன்கள்) மற்றும் 1,000 பிஎன்ஜி வாடிக்கையாளர் களுடன் செயல்பட ஆரம்பித்த நிறுவனம் இது.

 இந்த நிறுவனம் இன்றைக்கு 326 சிஎன்ஜி ஸ்டேஷன் களுடனும், 6.14 லட்சம் பிஎன்ஜி வாடிக்கையாளர்களுடனும் 2,500 வணிகரீதியான மற்றும் தொழிற் சாலைகளுக்கான உபயோகிப் பாளர்களுடனும் ஒரு முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அதே போல், அகில உலக ரீதியாக மிக அதிக எண்ணிக்கையிலான பஸ்களுக்கு சிஎன்ஜி சப்ளை செய்யும் ஒரு மிகப் பெரிய நிறுவனம் இது.

பிஎன்ஜி என்ற பைப்டு நேச்சுரல் கேஸ் எரியும்போது, முழுதாக எரிந்து எந்தவிதமான வாயுக்களையும் வெளியேற்றுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல்  மாசுபடுதல் என்பது  கணிசமாக குறைந்து போகிறது.  இந்த வாயு எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும் கேஸ் கிணறுகளில் இருந்தும் பெறப்பட்டு பைப் நெட்வொர்க்குகள் வழியாக நாடு முழுவதும் விநியோகிக்கப் படுகிறது.  பைப்டு நேச்சுரல் கேஸ் விலை குறைவு என்பதோடு,  சேமித்து வைக்கவேண்டிய அவசியமில்லை என்பது போன்ற வசதிகள் வாடிக்கையாளர் களுக்கு பிளஸ்.

ஏற்கெனவே எல்பிஜி கேஸை உபயோகிக்கும் வாடிக்கையாளர் கள் அதனை சிலிண்டராக வாங்கி உபயோகித்து அது தீர்ந்த பின்னர் புக் செய்து காத்திருந்து வாங்க வேண்டும். இந்த பிரச்னைகள் ஏதும் இல்லாமல்  பிஎன்ஜி கேஸ் பைப் மூலம் வருவதால் இதனை வாடிக்கை யாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்