ஷேர்லக்: போனஸ் பங்கு தரும் ஐடிசி!

தழ் முடிக்கும் கடைசிக் கட்ட பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, நம் கேபினுக்குள் சைலன்ட்டாக நுழைந்து மேசை மீது தயாராக இருந்த கார்ட்டூனை எடுத்துப் பார்த்தார். ‘‘மிகச் சரியாக கார்ட்டூன் போட்டுள்ளீர்கள்.
 
கடந்த காலங்களில் பல பிரச்னை களால் தமிழகத்தில் எதிர்பார்த்த தொழில் வளர்ச்சி இல்லாமல் போனது. இனிமேலாவது நல்லது நடக்கும் என நம்பி ஓட்டுப் போட்டவர்களின் கனவை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்’’ என அரசியல் பேசியவருக்கு பிளாஸ்க்கில் இருந்து இஞ்சி டீயை டம்பளரில் ஊற்றித் தந்தோம். 

‘‘காலாண்டு முடிவுகள் கலக்கலாக இருக்கிறதா?’’ என அவரை மேட்டருக்குள் இழுத்தோம் நாம்.

‘‘செலவு அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவு போன்றவற்றால் நான்காம் காலாண்டில் டாடா காபி-ன் நிகர லாபம் 12% குறைந்து போனது. ஏற்றுமதி குறைந்ததால் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் நிகர லாபம் 19% குறைந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் விற்பனை அதிகரித்ததால், லூபின் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 47.5% அதிகரித்துள்ளது.

நிகர விற்பனை 15% குறைந் துள்ள நிலையிலும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்-ன் நிகர லாபம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து, ரூ.171 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், செலவுக் குறைப்பு மற்றும் இதர வருமானம் அதிகரிப்பாகும்.

வருமானம் அதிகரித்ததால், ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் 6% அதிகரித்துள்ளது. இரண்டு பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸாக வழங்கி இருப்பதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்’’ என்றவர், ‘‘வங்கிகளின் காலாண்டு முடிவுகள்தான் மிகவும் மோசமாக இருக்கிறது’’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார்.

‘‘அப்படியா... என்ன காரணம்?’’ என்று நாம் ஆர்வமாக கேட்கத் தொடங்கினோம். 

‘‘நிகர வாராக் கடனுக்கு ரூ.900.9 கோடி ஒதுக்கப்பட்டதால், தேனா வங்கியின் நிகர லாபம் 88.5% குறைந்துள்ளது. வாராக் கடன் மற்றும் மோசடிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ததால் நான்காம் காலாண்டில் சிண்டி கேட் பேங்க் ரூ.2,158 கோடியை நிகர இழப்பாக பெற்றுள்ளது. வாராக் கடன் மற்றும் பணியாளர் ஓய்வூதிய பயன்களுக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்ததால் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.413 கோடியை நிகர இழப்பாக பெற்றுள்ளது.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் கார்ப்பரேஷன் வங்கி, மார்ச் காலாண்டில் ரூ.510 கோடியை நிகர இழப்பாக பெற்றுள்ளது. வங்கி வரலாற்றில் முதல் முறையாக ஒரு காலாண்டில் அதிக நிகர இழப்பை பெற்ற வங்கியாக, பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி) இருக்கிறது. மார்ச் காலாண்டில் அதன் மொத்த வாராக் கடன் கிட்டத் தட்ட இரு மடங்கு அதிகரித்து 12.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் அதன் நிகர இழப்பு ரூ.5,367 கோடி!’’ என்றார்.

‘‘அம்மாடியோவ்! ஆர்பிஎல் பேங்க் ஐபிஓ வருகிறதாமே!’’ என அடுத்த பாயின்ட்டை எடுத்துக் கொடுத்தோம்.

‘‘கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதலே இதற்கான நடவடிக்கை களை இந்த வங்கி எடுத்து வரு கிறது. ஜூலையில் இந்த வங்கி புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.1,100 கோடி திரட்டத் திட்ட மிட்டுள்ளது. ஆனால், இதற்கான அனுமதி செபியிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் துறையை சேர்ந்த கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனப் பங்குகளை நடப்பு நிதி ஆண்டில் பட்டியலிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அதன் வசம் உள்ள பங்குகளில் 10 சதவிகிதத்தை அதாவது, மொத்தம் 3.39 கோடி பங்குகளை விற்பனை செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் (ஹெச்சிசி) பங்கு வெளியீடு மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் பங்குச் சந்தை இரண்டும் ஏற்றத்தில் இல்லாததே.

பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வரவிருக் கிறது. இந்த நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகள் அதன் தாய் நிறுவனமாக உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்கிடம் இருக்கிறது. பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, அதிக வாராக் கடனில் சிக்கி இருக்கும், இந்த வங்கியை தூக்கி நிறுத்தப் பயன்படுத்தபட லாம்’’ என்றவர், மேசை மீது இருந்த சிப்ஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்