பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளில் நிஃப்டி ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிந்தபோதும், அதனைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் அடுத்த நான்கு நாட்களில் சந்தை இறங்கியதை பார்த்தோம்.

அதோடு கடந்த வார வர்த்தக நாட்களில் இன்ட்ரா டே-ல் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருந்தது. அது மட்டுமின்றி, கடந்த வாரத்தில் வெளியான, பல அரசியல் தொடர்பான செய்தி கள்கூட காளைகளை  உற்சாகப் படுத்தியதாக தெரியவில்லை.

இத்தனை நாட்கள் ஏறி வந்த சந்தை இனி சற்று பெரிய இறக்கத்தை சந்திக்கலாம். கடந்த வாரத்தில் நிஃப்டி அதன் வலுவான ரெசிஸ்டன்ஸான 7950 என்கிற புள்ளிகளை உடைத்து வர்த்தகமாக மீண்டும் காளைகள் முயற்சித்தன. ஆனால், உடைக்க இயலவில்லை.

இந்த செயல், காளை வர்த்தர் களிடம் தெளிவு இல்லாததையே காட்டுகிறது. கடந்த வாரத்தில் வெளியான செய்திகளும் கரடி வர்த்தகர்களுக்கு சாதகமானதாக இருந்தது.

நிஃப்டி-யின் டெய்லி சார்ட்டை பார்க்கும்போது, தற்போது  நிஃப்டி  அதன்  9 நாள் இறக்கத்தில் இருப்பதை பார்க்கலாம். எனவே, வரும் வாரங்களில் நிஃப்டி இன்னும் இறக்கத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பேங்க் நிஃப்டிகூட, நிஃப்டியை போலவே பேட்டர்ன்களை காட்டுகிறது. கடந்த வாரத்தில் பேங்க் நிஃப்டி தன் சப்போர்ட் லெவலான 16500 என்கிற புள்ளியை நெருங்கி முடிந்திருக்கிறது.

ஸ்டிரைக் விலை 8200-ல், கால் ஆப்ஷன் 7900-ஐ வாங்கி இருப்பதால் அடுத்து வரும் வாரங்களில் சந்தை தொடர்ச்சி யாக ஏறும் என்பது கடினம்தான் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சம்பந்தமான செய்திகள் முடிந்திருக்கும் நிலையில், சந்தையை இறக்குவது எளிதாக இருக்கும். அப்படி பார்க்கும்போது, ஒட்டுமொத்த மாக அடுத்து வரும் வாரங்களில் இறக்கத்தை எதிர்பார்க்கலாம். அதோடு நிஃப்டி சார்ட்டில் இருக்கும் ஃபெபினாசி விகிதத்தை பார்க்கும்போது சந்தை  இறங்கலாம். 

எனவே, 7775 முதல் 7800 வரையான புள்ளிகளில் 7850 என்கிற புள்ளியை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக்கொண்டு  நிஃப்டியில் ஷார்ட்  போகலாம். வரும் வாரங்களில் 7650 / 7575-க்கு இறங்கக்கூடும். அதே போல், பேங்க் நிஃப்டி 16100 முதல் 16200 என்கிற புள்ளிகள் வரை இறக்கம் வரலாம். எனவே, பேங்க் நிஃப்டி யிலும் ஷார்ட் போகலாம்.

லூபின் (LUPIN)  

தற்போதைய விலை : ரூ.1,504.80

விற்கவும்


இந்தப் பங்கின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்தாலும், நிறுவனத்தின் சார்பாக வரும் கருத்துக்கள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிப்பதாக இல்லை. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (US FDA)  அளித்த எச்சரிக்கைகளுக்கு தெளிவான விளக்கம் இல்லை,  மருந்து தயாரிப்புக்கான செலவு அதிகரிப்பு போன்ற செய்திகள் சந்தையால் ஊக்குவிக்கப் படவில்லை.

ஒருவேளை இந்தப் பங்கு  கேப் டவுனில் (gap down) வர்த்தகமாகத் தொடங்கி இறக்கத்திலேயே  வர்த்தகம் நிறைவடைந்தால், அதனைத் தொடர்ந்து பங்குகளின் விலை மேலும் குறையலாம். அதன் பிறகு 1,410 ரூபாய் வரை பங்கின் விலை குறையும். தற்போதையை விலையிலிருந்து 1530-க்கு உயர வாய்ப்புண்டு. அதன்பிறகு விலை இறங்கும்பட்சத்தில் ஷார்ட் பொசிஷன் எடுக்கலாம். ரூ.1550 -ஐ ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்