நிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரி வரை வியாபார வாய்ப்பு குறைவுதான் !

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நெகட்டிவ் செய்திகள் தொடர்ந்தால் வேகமான இறக்கம் வந்துவிடக்கூடும் என்றும், செய்திகள் பாசிட்டிவ்வாக வராதவரை ஏற்றம் தொடர்ந்து வர வாய்ப்பேயில்லை என்று சொல்லுமளவுக்கே நிலைமை இருக்கிறது;

டெக்னிக்கல் செட்டப் பில் பெரிய மாறுதல்கள் ஏதும் இல்லை என்றும் நெகட்டிவ்வான ஃபண்டமென்டல் செய்திகளும், நிகழ்வுகளும் திடீர் இறக்கங்களை கொண்டுவந்துவிட வாய்ப்பு இருப்பதால் புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக வரும் வாரத்தில் தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லி இருந்தோம்.

வாரத்தின் இரண்டு நாட்களில் ஏற்றத்தையும் மூன்று நாட்கள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 65 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரம் மே மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருக்கிறது. பெரும்பாலான மூவ்மென்ட்டுகள் எக்ஸ்பைரி எதிர்பார்ப்பைப் பொறுத்தே இருக்கும். பெரிய அளவிலான வியாபாரத்துக்கான வாய்ப்பு எக்ஸ்பைரி வரை இருக்காது எனலாம்.

ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட பெரிய ஸ்விங்குகள் வரக்கூடும் என்பதை மனதில் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரமாக இருப்பதால், செய்திகளும், நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.

7740 லெவல்களை வால்யூமுடன் கட் செய்து வேகமாக இறங்கும்பட்சத்தில் 7470 வரை சென்று உடனடியாக மேலே திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதும் வியாபாரத்தின் அளவினை மிக மிக கணிசமாக குறைத்துக்கொள்வதே இது போன்ற தருணங்களில் சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும் எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்