கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் அம்பாலால் மல்டி கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் வி.அருண்.

தங்கம்!


அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டத்துக்கு  முன்பே, அமெரிக்காவில் வட்டி விகிதம் குறித்த பதற்றம், தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரம் சிகாகோ மத்திய வங்கித் தலைவர் சார்லஸ் இவான்ஸ், அமெரிக்க மத்திய வங்கி தற்போது மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் குறுகிய கால வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுமட்டுமின்றி, 2017-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க மத்திய வங்கி, மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் தங்கம் விலை உயர்வு மற்றும் பண்டிகை சீசன் காரணமாக உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இதன் விலை அதிகரித்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில், தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் பொறுத்தவரை, 29,600-க்கு கீழ் குளோஸ் ஆகும்போது 29,380 முதல் 29,100 வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், 30,000-யைத் தகர்க்கும்போது 30,280 முதல் 30,450 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்