இந்தியாவைக் குறிவைக்கும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்!

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

டந்த சில ஆண்டுகளாக இந்தியாவை குறிவைத்து முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றன தனியார் நிதியங்கள் எனப்படும் பிரைவேட் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்கள். 

பிரைவேட் ஈக்விட்டி!

தனியார் நிதியங்கள் என்றால் எவை, அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்கிற கேள்விகள் எல்லோருக்கும் எழக் கூடியவை. அவர்கள் யார் என்று ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் நேரடியாகத் தொழில் செய்யாமல் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலீட்டாளர்கள். அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள். உலகப் பொருளாதார வளர்ச்சி காரணமாக வெளிநாட்டினரிடம் அதிகப்படியான பணம் கைகளில் புழங்கியது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, வளைகுடா நாடுகள் போன்றவற்றில் அதிகப்படியான பணப்புழக்கம் இருந்து வந்த காரணத்தால், அனைத்தையும் தங்களது நாடுகளில் முதலீடு செய்யாமல் வெளிநாடுகள், அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள தொழில்களில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது.

முதலீட்டு மந்திரம்!

செகோயா கேபிட்டல், க்ரிஸ் கேபிட்டல், சாஃப்ட் பேங்க், டைகர் ஃபண்ட்ஸ், அபேக்ஸ் பார்ட்னர்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் மேலும் பல இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் கடந்த காலங்களில் முதலீடு செய்துள்ளன. இவர்களின் முதலீட்டுத் தாரக மந்திரம் என்ன?

தனியார் நிதியங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டுத் தாரக மந்திரம் என்பது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் துவக்க காலத்திலேயே முதலீடு செய்து, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து, பிற்காலத்தில் அந்தப் பங்குகளை வேறு ஒரு நிறுவனத்துக்கு  விற்றுவிட்டு, அவர்கள் செய்த முதலீட்டுக்கு கணிசமான லாபத்தைப் பெறுவதுதான். சொல்வதற்கும் கேட்பதற்கும் சற்றே எளிதாகவும் சுலபமாகவும் காணப் பட்டாலும், அவர்களின் பணி மிகக் கடுமையானது, சவாலானதும்கூட. காரணம், ஒரு நிறுவனத்தின் துவக்க காலத்தில் அந்த நிறுவனம் நல்ல நிலையை எட்டும் என்று கணிப்பதும் உறுதியாகக் கூறுவதும் மிகக் கடினமான காரியம்தான்.  பொருளாதாரச் சூழல், ஒரு நிறுவனத்தின் தொழில், ஒரு நிறுவனத்தின் பின்னணி, முதலீட்டுக் காலம், நாட்டின் தொழில் கொள்கை என பல்வேறு நோக்கில் ஆராய்ந்து விட்டுத்தான் முதலீட்டு முடிவை எடுக்கின்றன இந்த நிறுவனங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்