மூடுவிழா! - வியாபாரச் சிறுகதை!

பார்த்தசாரதி ரெங்கராஜ், ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ண்மையிலேயே அந்த பத்து பேரும் மிகவும் அதிர்ந்திருந்தனர். ஆச்சர்யக்குறியும், கேள்விக்குறியும் சேர்ந்து கலந்தடிக்கப்பட்ட உணர்ச்சி அவர்களைக் கொஞ்சம் நேரம் அசைவற்றுப்போக வைத்திருந்தது. மௌனங்களில் கரைந்த சில நிமிடங்களுக்குப்பின் தங்களுக்குள் அவர்கள் குசுகுசுக்கத் தொடங்கி இருந்தனர்.

‘இது என்னது பைத்தியக்காரத்தனம்! வயது ஏற ஏற இந்த ஆளுக்கு மூளை குழம்பிவிட்டதா என்ன?’

காலையில் 10 மணிக்கு அவர்கள் அந்த அறைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது பன்மடங்காகி இருந்தது.

அவர்கள்...?!

இளமையானவர்கள்; துடிப்பானவர்கள்; மூளையின் ஒவ்வொரு நியூரானிலும் ‘பணம் பண்ணுவது எப்படி?’ என்று போதிக்கப் பட்டிருந்தவர்கள்; இந்தியாவின் தலைசிறந்த பி.ஸ்கூல்கள் எனப்படும் ஐ.ஐ.எம் போன்ற பிஸினஸ் ஸ்கூல்களில் டிஸ்டிங்ஷனில் வெளிவந்து, நாட்டின் மிக முக்கிய தொழில் நிறுவனங்களின் ‘மோஸ்ட் வான்டட்’-ஆக இருக்கும் மேனேஜ்மென்ட் புலிகள்.

அந்த அறை அழகாக இருந்தது. எளிமையாக பணக்காரத்தனத்தை பறைசாற்றுவது எப்படி என்பதற்கு உதாரணமாக இருந்தது. அது அந்த நிறுவனத்தின் கான்ஃபரன்ஸ் ஹால். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒரு புரஜெக்டர். உயர்தரத் தோலினாலான நாற்காலிகள். ஜில்லென்று ரோஜா மணத்தைப் பரப்பும் ஏ.சி. மிக அழகான லேசாக நடனமிடும் திரைச்சீலைகள். நடுநாயகமாக அவர் அமர்ந்திருந்தார்.

காலையில் அவர் அறைக்குள் வந்து பேச ஆரம்பித்த தொனியில் துவங்கிய அந்த நொடி ஆச்சர்யம், இப்போது முடித்தபின்னும் அதிர்வலைகளைக் கிளப்பி இருப்பதைப் புரிந்துகொண்ட அவர் லேசான புன்னகை யுடன் இருந்தார். அவர் 45 வயதுக்கான கம்பீரத்துடன், ‘நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்’ என்று தன் உடல் மொழிகளால் பறைசாற்றிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் பின்னோக்கிப் போகலாம்.

மிகச் சரியாக 10 மணிக்கு அவர் நுழைந்து, ஃபார்மாலிட்டி விசாரிப்புக்களும், அறிமுகங்களும் பரஸ்பரம் முடிந்தபின் உரையாடலை இப்படித் தொடங்கினார்.

“ஜென்டில்மென், முதலில் உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி. நான் உங்களுக்கு பேசிய சம்பளம் உங்களுக்கு திருப்தி தருகிறதா? இல்லை என்பவர்கள் இப்போதே என்னிடம் தெரிவியுங்கள்; அரை மனதுடன் யாரையும் நான் வேலை வாங்குவதில்லை.”

அறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. திருப்தி இல்லை என்று கூறினால் ஒருவேளை சம்பளம் அதிகப்படுத்தப்படலாம் அல்லது வேலை பறிபோகலாம். அதைவிட அவர்கள் படித்துவந்த இடத்தில் கற்றுத்தரப்பட்ட  மேஜை நாகரிகம் காரணமாககூட பேசாமல் அமைதிகாத்து இருக்கலாம்.

“ஃப்ரெண்ட்ஸ்! நீங்கள் சேர்ந்திருக்கும் இந்த நிறுவனம், இன்றையத் தேதியில் நஷ்டக் கணக்கில் ஓடுகிறது. கடந்த இரண்டு வருடத்தில் நமது விற்பனைத் திறன் 30% மற்றும் தயாரிப்புத்திறன் 35% என இறங்கு முகத்தில் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்